வாக்காளர்கள்  விழிப்புணர்வுக்காக….

ன்று தேசிய வாக்காளர் தினம் நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பல இடங்களில் வாக்களிப்பது குறித்த விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், பத்திரிகை.காம் இணையதள வாசகர்களுக்கு,  வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம்பெற்றுள்ளதாக என்பது குறித்து அறிய எளிய வழிகளை தெரியப்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தலும்  நெருங்கி வந்துகொண்டிருக்கிறது.  இதன் முன்னேற்பாடாக வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வரும்   டிசம்பர் 31ந்தேதி வாக்காளர் இறுதிப் பட்டியில் நாடு முழுவதும் வெளியாகும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், ஏற்கனவே வாக்காளர் அட்டை உள்ளவர்கள், 18 வயது நிரம்பி புதிதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவரும், தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

தேர்தலின்போது நாம் வாக்களிக்க விரும்பினால்,  இந்திய தேர்தல் ஆணையத் தால் வழங்கப் பட்ட வாக்காளர் அடையாள அட்டை உங்களிடம் இருக்க வேண்டும், அதுபோல  உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும். உங்கள் வாக்கைத் பதிவு செய்வதற்கு வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் மட்டும் போதாது, வாக்காளர் பட்டியலிலும் உங்கள் பெயர் இருக்க வேண்டும்.

ஏனென்றால் வாக்காளர் பட்டியலில் அவ்வப்போது திருத்தங்கள் நடைபெற்று வருவதால், சில சமயம் நமது பெயர் வாக்காளர் பட்டியிலில் இருந்து விடு பட்டிருக்க வாய்ப்பு உண்டு. இதன் காரணமாக நாம் வாக்களிக்கும் உரிமையை பறிகொடுக்க நேரிடும். எனவே, வாக்காளர் ஒவ்வொருவரும் வாக்காளர் பட்டியலில் தமது பெயர் உள்ளதா என்பதை  சரிபார்க்க வேண்டிது அவசியம்.

சரி… வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளதாக என்பதை எவ்வாறு சரிபார்ப்பது…..  என்பது குறித்து  இங்கே விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்விஎஸ்பி  NVSP (You need to log on to the National Voters’ Service Portal) https://www.nvsp.in/#main-content என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதள பக்கத்தில்  லாகின் செய்து, அதில் சம்பந்தப்பட்ட பக்கத்தை பார்வையிட வேண்டும்.

இங்கு உங்கள் பெயர் இருக்கின்றதா? என்பதை தெரிந்து கொள்ள இரண்டு முறைகள் உள்ளன. 

உங்கள் பெயர் உள்பட உங்களுடைய விபரங்களை தெரியப்படுத்துதல் அல்லது EPIC எண் என்று கூறப்படும் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பயன்படுத்துதல்.

உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் EPIC எண் இருந்தால் உங்களுக்கு EPIC எண் இருந்தால், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் சரிபார்க்க இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.

EPIC இலிருந்து தேடல் என்பதை கிளிக் செய்து, அதனுள் உங்கள் EPIC எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதற்கு கீழே உள்ள மெனுவில் இருந்து மாநிலத்தை தேர்வு செய்து, படத்தில் நீங்கள் காணும் குறியீட்டில் முக்கியம். பின்னர்  தேடல் (Search )  என்பதை கிளிக் செய்தால் உங்கள் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பத தெரிய வரும்.

அல்லது, உங்களது பெயர், முகவரி மற்றும், நீங்கள் வசிக்கும் தொகுதி பெயர் போன்றவற்றை உள்ளீடு செய்து, அத்துடன், இணையதளத்தில் கொடுக்கப் பட்டுள்ள  captcha என்ற கட்டத்தில் உள்ள எழுத்தை பதிவு செய்து, தேடுதல் (Search) பட்டனில் கிளிக் செய்தால், பட்டியலில் பெயர் இருந்தால், தெரியப்படுத்தும்.

இந்த இரண்டு முறைகளிலும் உங்கள் பெயர்  தெரியவில்லை என்றால், உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று அர்த்தம்.

அதைத்தொடர்ந்து புதிதாக வாக்காளர் பதிவு செய்வதற்கான படிவங்கள் இணைய தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம்  தங்களை மீண்டும் பதிவு செய்து கொள்ளலாம்.

புதிய வாக்காளர்கள் பதிவு செய்ய படிவம் 6ஐ நிரப்ப வேண்டும். அத்துடன் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் வயது மற்றும் குடியிருப்பு ஆதாரம் ஆகியவையும் சமர்பிக்க வேண்டும்.

அதுபோல பலர் உயிருடன் இருக்கும்போதே, இறந்தவர்களாக கருதப்பட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டிருக்கலாம். அல்லது எழுத்துப்பிழை காரணமாக அவர்கள் பெயர் விடுபட்டிருக்கலாம். அப்படிப் பட்டவர்கள், மீண்டும் தங்களை புதுப்பிக்க, படிவம் 8 ஐ நிரப்ப வேண்டும்.

மேலும், ஒருவர் தொகுதியில் உள்ள வேறு இடத்திற்கு குடியிருப்பை மாற்றியிருந்தால், படிவம் 8A ஐப் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

அதுபோல, ஒரு தொகுதியில் இருந்து மற்றொரு தொகுதிக்கு மாறுபவர்கள்,
வாக்காளர் பட்டியலிலிருந்து தங்களது  பெயரை நீக்கிவிட்டு, ஒரு புதிய தொகுதியிடம் மாற்ற விரும்பினால், படிவம் 6 உடன் நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

படிவம் 6 ஒரு புதிய தொகுதியில் வாக்களிக்க பதிவு செய்தும், படிவம் 7 ஐயும் நிரப்பி விண்ணப்பித்தால்,  தங்களது பெயர்  பழைய வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும்.

நமது நாட்டில் வாக்காளர் அடையாள அட்டை முதல் ஆதார் அடையாள அட்டை வரை அனைத்தும் குளறுபடிகளாகவே காணப்படுகிறது. எந்தவொரு அட்டை யிலும், சரியான முகவரியோ, சரியான புகைப்படங்களோ இடம்பெறுவது இல்லை.  இதன் காரணமாகவே பெரும்பாலோனோர் பெயர்கள் பட்டியலில் இருந்து விடுபட்டு, கள்ள ஒட்டு போட சாதகமாகி வருகிறது.

இதை தடுக்க ஒவ்வொருவரும், தங்களது பெயரை சரிபார்க்க வேண்டியது அவசியம்…