லக்னோ:
த்திர பிரதேச மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், அம்மாநிலத்தில் செல்வாக்கு மிக்க வருண்காந்தி, பா.ஜ.கவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உத்திரபிரதே மாநிலத்தில் தற்போது சமாஜ்வாடி கட்சியின் தலைமையிலான அரசு நடந்துகொண்டிருக்கிறது. முதல்வராக அகிலேஷ் யாதவ் இருக்கிறார்.  இந்த மாநிலத்தில் அடுத்தவருடம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடக்க இருக்கிறது. இதையடுத்து முக்கிய கட்சிகள் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன.
ஆளும் சமாஜ்வாடி கட்சி, ஊழல், நிர்வாகத் திறன் இன்மை, அக் கட்சியின் தலைவர் முலாயம்  அவ்வப்போது பேசும் அதிரடி பேச்சுக்கள் ஆகியவற்றால் மக்களை விட்டு விலகியிருக்கிறது.  இலவச திட்டங்களை  அறிவித்து மீண்டும் வெற்றி பெற்றுவிடலாம் என்று அக்கட்சி திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி இருந்தாலும் மக்களிடம் எடுபடுமா என்பது சந்தேகமே.
இன்னொரு முக்கிய கட்சியான பகுஜன் சமாஜ். இதன் தலைவர் மாயாவதி இதுவரை தேர்தல் வியூகங்கள  வகுப்பதில் பெரிய ஆர்வம் காட்டவில்லை. சில சிறு கட்சிகளோடு கூட்டணிக்காக பேசி வருவதோடு சரி.
இந்த நிலையில் மற்றொரு முக்கிய கட்சியான காங்கிரஸ் அதிரடியாக தேர்தல் வியூகங்களை வகுத்து பிற கட்சிகளுக்கு கிலியூட்டி இருக்கிறது.  பிரபல நடிகரும் எம்.பியுமான் ராஜ்பப்பர்  உ.பி. காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.  உ.பி. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி இப்போதுதான் மிக பிரபலமான ஒருவரை தலைவராக நியமித்திருக்கிறது. ராஜ்பப்பர் கட்சியின் நீண்ட நாள் உறுப்பினர் என்பதோடு, தொண்டர்களிடம் நெருங்கிப்பழகக்கூடியவர். ஆகவே இவர் தலைவராகியிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பலம்.
359623-raj-babbar-700
அதோடு பிரயங்கா வதேரா, அக்கட்சிக்காக முழுவீச்சில் பிரச்சாரத்தில் ஈடுபட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுவும் காங்கிரஸுக்கு கூடுதல் பலம்.
இன்னொரு முக்கிய கட்சியான பா.ஜ.க.தான் பரிதாப நிலையில் இருக்கிறது. அக் கட்சியின் முதல்வர் வேட்பாளராக ராஜ்நாத்சிங், யோகி ஆதித்யனார், ஸ்மிருதி இராணி ஆகியோர் இடையே பனிப்போர் நடந்துவருகிறது. மூவருக்கும் உ.பியில் ஓரளவுக்கு செல்வாக்கு உண்டு என்பதால்  இவர்களுக்கிடையேயான மோதல், கட்சியின் அடிமட்டம் வரை பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறது உ.பி. பத்திரிகையாளர் வட்டாரம்.
இந்த மூவருக்குள் நிலவும் போட்டி ஒருபுறம் இருக்க, இவர்கள் அனைவரும் சேர்ந்து வருண்காந்தியை ஒடுக்கி வைக்க நினைக்கிறார்கள். ஏனென்றால் இவர்களைவிட வருண்காந்தியே உ.பி. பாஜகவினர் மற்றும் பொதுமக்களிடத்தில் செல்வாக்கு பெற்றவராக இருக்கிறார்.  சமீபத்தில் இந்தியாடுடே, இ டிவி ஆகிய தொலைக்காட்சிகள் தனித்தனியாக நடத்திய கருத்திக்கணிப்பில் “பாஜக முதல்வர் வேட்பாளராக வருண்காந்தியை அறிவிக்க வேண்டும்” என்று 50 சதவிகித மக்கள் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.
332963-varun4
“உண்மையில்  சொல்லப்போனால் வருண்காந்திதான் பா.ஜ.க.வில் மிக அதிக மக்கள் செல்வாக்கு பெற்றவராக இருக்கிறார்” என்கிறார்கள்  அரசியல் நோக்கர்கள். மேலும் அவர்கள், “வருண்காந்தியின் செல்வாக்கு பாஜக மூத்த தலைவர்களை  எரிச்சலடைய வைத்திருக்கிறது.  அக் கட்சியின் தேசிய  குழு கூட்டம் சமீபத்தில் அலகாபாத்தில் நடந்தது. அப்போது வருண் காந்திக்கு நகரெங்கும் பேனர்கள், ப்ளக்ஸ்களை வைத்திருந்தனர் அவரது ஆதரவாளர்கள். இது மூத்த தலைவர்களை குறிப்பாக அமித்ஷாவை  எரிச்சலடைய வைத்தது. அவர், வருண்காந்தியிடம், “ நீங்கள் எம்.பி.யாக இருக்கும் சுல்தான்பூர் தொகுதியில் மட்டும் கட்சிப்பணியாற்றினால் போதும்” என்று சொல்லியிருக்கிறார்.இது வருண்காந்தியை ரொம்பவே பாதித்திருக்கிறது. உ.பி. பாஜக தலைவர்களிலேயே அதிக செல்வாக்கு பெற்றிருக்கும் தன்னையே முதல்வர் வேட்பாளராக பாஜக அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவருக்கு இருந்தது. ஆனால் அது நடக்காது என்பதை மூத்த தலைவர்கள் தங்களது செயல்களால் உணர்த்திக்கொண்டே இருக்கிறார்கள். ஆகவே வருண்காந்தி வருத்தத்தில் இருக்கிறார்.
M_Id_374225_Priyanka_Gandhi_Vadraஇதையடுத்து அவரது நடவடிக்கையிலும்  மாற்றங்கள் தெரிகின்றன. முன்பெல்லாம் இந்துத்துவா கொள்கையை உயர்த்தி பேசுவார், எழுதுவார். ஆனால் அவர் நாளிதழ்களில் அவர் எழுதி வரும் கட்டுரைகளில் சமீபகாலமாக மதச்சார்பின்மை எட்டிப்பார்க்கிறது” என்கிற அரசியல் நோக்கர்கள், “பா.ஜ.கவில் இருந்தாலும், பிரியங்கா வதேராவிடம் பாசமிக்க சகோதரராகவே பழகுகிறார் வருண்காந்தி. இருவரும் தினமும் எஸ்.எம்.எஸ்ஸில்  தங்களது குடும்ப விஷயங்களை பறிமாறிக்கொள்கிறார்கள்.
 
தவிர இரு சோனியா காந்தி – மேனகா காந்தி இருவரிடையே இருந்த விலகல் சமீபகாலமாக குறைந்துவருகிறது. கடந்த ஜூன் மாதம் சஞ்சய் காந்தியின் நினைவு நாள் அன்று அவரது நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார் சோனியாகாந்தி. பல வருடங்களுக்குப் பிறகு நடந்த நிகழ்வு இது” என்று குறிப்பிட்டிருக்கிறது ஃபர்ஸ்ட்போஸ்ட் டாட் காம் என்கிற  இணைய இதழ்.
453547-maneka-gandhi-sonia-gandhi
மேலும், “பா.ஜ.கவில் மூத்த தலைவர்கள் தரும் நெருக்கடி, சோனியா காந்தி குடும்பத்துடன் ஏற்படும் நெருக்கம்  ஆகியவை வருண் காந்தியை காங்கிரஸை நோக்கி செல்ல வைத்திருக்கிறது. விரைவில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைவார்” என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
இதை வருண்காந்தியின் தாயாரான மேனகா காந்தி எப்படி எடுத்துக்கொள்வார்?
”பா.ஜ.க அமைச்சரவையில் மேனகா காந்தி இருந்தாலும் அவரும் மனத்தாங்கலோடுதான் தொடர்கிறார்.  சமூக வலைதளங்களில் பெண்களை இழிவுபடுத்துவதை தடுக்க வேண்டும் என்று அவர் ஒருமுறை கூறியபோது பாஜகவினே அவரை பகடி செய்தார்கள். அதே போல விலங்குகள் நலன் குறித்த அவரது கருத்துக்களுக்கு அவ்வப்போது பாஜக அமைச்சர்களே மாற்றுக்கருத்தைச் சொல்லி மேனகாவை வருத்தப்பட வைக்கிறார்கள். ஆகவே வருண்காந்தி காங்கிரஸ் கட்சிக்கு மாறினால் அதை வரவேற்கும் எண்ணத்தில்தான் மேனகா இருக்கிறார்” என்கிறார்கள் உபி. பத்திரிகையாளர்கள்.
அப்படி நடந்தால், உ.பி. சட்டமன்ற தேர்தலில்  காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதியாகிவிடும்.  அதே நேரம் பாஜக கடும் தோல்வியை சந்திக்கும் என்பதே தற்போதைய நிலை.