நெட்டிசன்:
மூத்தபத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
இதுதான் மதம் போதிக்கும் பண்பா?
அகால சம்பவத்தில் பள்ளி மாணவனான 7 வயது மகனை இழந்திருக்கிறார் ஒரு தாய்..
உலகமே திரண்டு ஆறுதல் சொன்னாலும் இப்படிப்பட்ட சோகத்தில் உள்ள ஒரு எந்த ஒரு தாயையயும் தேற்றுவது கடினம்.
கையில் சடலமாக கிடைக்கும் மகனை புதைக்க கல்லறையில் இடம் தர மறுக்கிறது கிறிஸ்தவ அமைப்பு..
பாதிக்கப்பட்ட தாயே, நீங்கள் எல்லாம் ஒரிஜினல் கிறிஸ்துவர்களா?” என்று கேட்கிறார்.
கேட்டால் விதிமுறை என்கிறார்கள். ஒரு ஏழு வயது மகனைப் அடக்கம் செய்வதில் என்ன பெரிதாக மோசடி செய்து விடப் போகிறார் அந்தத்தாய்?
ஆயிரம் விதிமுறைகள் இருந்தாலும் கண்ணீரோடு கண்ணீரோடு இருக்கும் அபலை தாய்க்கு, நாங்கள் இருக்கிறோம் உதவுவதற்கு முன்வராத மத காப்பாளர்களை என்னவென்று சொல்வது..
[youtube-feed feed=1]