ஸ்ரீதேவி மரணத்துக்கு  காரணம் இதுதானா?

Must read

 

பிரபல நடிகை ஸ்ரீதேவி மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐம்பத்தி நான்கே வயதான அவர், தனது உடல் நலத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர். தினசரி உடற்பயிற்சி செய்வதோடு  யோகா,  நீச்சல், டென்னிஸ் என்று ஈடுபடுவார். வருடம் ஒரு முறை முழுமையான மெடிக்கல் செக் அப் செய்துகொள்வார். அதோடு உணவுக் கட்டுப்பாடும் கொண்டவர்.

இப்படிப்பட்டவர் திடீரென மாரடைப்பால் மரணமைடந்ததை யாராலும் நம்ப முடியவில்லை.

நான்கு வருடங்களுக்கு முன் துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூருடன் கலந்து கொண்டார். அப்போது அவரது முன்னழகு வழக்கத்தை விடவும் பெரிதாக காணப்பட்டது. அதனால் அவர் அறுவை சிகிச்சை மூலம் முன்னழகை பெரிதாக்கியதாக யூகம்  கிளம்பியது.

அதே போல சமீபத்தில் அவர் உதடுகளுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக செய்திகள் வெளியாகின. பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அவரின் உதடுகள் விகாரமாகிவிட்டதாகக் கூறி ஒரு ஒளிப்படம் சமூகவலைதளங்களில் பரவியது.

தவிர தமிழில் இருந்து இந்திக்கு நடிக்கப்போகும்போது தனது மூக்கை அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார் என்றும் கூறப்பட்டது.

மேலும், “முகம், மூக்கு, என நிறைய காஸ்மெடிக் சர்ஜரி செய்துகொண்டார்.  அதோடு   தெற்கு கலிபோர்னிய நாட்டின் மருத்துவர் ஒருவரின் அறிவுரைப்படி, பசி ஏற்படாமல் இருக்க, (பருமனாவதைத் தடுக்கும் ) ஹைட்ரோக்ஸைல் மருந்துகளையும் சாப்பிட்டு வந்தார்.

இது போன்ற சிகிச்சைகள் மேற்கொள்பவர்கள், கடுமையான வாதநோயால் பாதிக்கப்பட்டு உருக்குலைந்து இறப்பார்கள். ஆனால் கெடுதலிலும் ஒரு நன்மையாக மாரடைப்பால்… தனது விருப்பப்படி.. அழகு குறையாமல் மரணடைந்தார் ஸ்ரீதேவி”  என்றும் ஒரு கருத்து உலவுகிறது.

More articles

Latest article