சென்னை : பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 8ந்தேதி தொடங்கி வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பரிசு தொகுப்புடன்  பொங்கல் செலவுகளுக்கான ரொக்கப் பணம் உண்டா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி,  , ஒவ்வொரு ஆண்டும்  ரேசன்கார்டுதாரர்களுக்கு அரசு சார்பில் இலவச பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், இந்த இலவச தொகுப்புடன் பணமும் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திமுகஅரசும், கடந்த  2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்கியது. ஆனால், கடந்த ஆண்டு நிதிநிலையை  சுட்டிக்காட்டி,  பணம் வழங்கப்படவில்லை. 

கடந்த ஆண்டு பொங்கலுக்கு, கார்டுதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது மேலும், இலவச வேட்டி சேலைகளும் முறையாக வழங்கபடவில்லை..அதனால்,  இந்த ஆண்டு கட்டாயம் பணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.  

பொங்கல் பண்டிகை வர இரண்டு வாரங்களே உள்ள நிலையில், 2.22 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான அரசாணையை, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை செயலர் சத்யபிரதா சாஹு  ஜனவரி 1ந்தேதி  பிறப்பித்துள்ளார். அதில், ரொக்கப் பணம் குறித்த தகவல் இல்லை.

. இந்த நிலையில், ஜன.8ல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதன் பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குகின்றனர்.

இதனிடையே பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்கள் தற்போது அச்சிடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் அறிவிப்பை பொறுத்து வருகிற 4 அல்லது 5ம் தேதி முதல் டோக்கன்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்போடு ரொக்க பணம் வழங்குவது தொடர்பாக இன்றோ அல்லது நாளையோ முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

[youtube-feed feed=1]