சென்னை:
தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ள உள்ள டாஸ்மாக் கடைகளில், விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களின் விலைப்பட்டியல் ஒட்டப்பட்டுள்ளதா என சென்னை உயர்நீதி மன்றம் தமிழகஅரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.

கொரனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்படதையடுத்து மூடப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை மீறி, கடந்த வாரம் திறக்கப்பட்டது. இது தொர்பாக வழக்குகள், தடை என பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வந்தன. ஆனால், உச்சநீதி மன்றம், டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழகஅரசு பச்சைக்கொடி காட்டிவிட்டது.
இந்த நிலையில் சேலத்தை சேர்ந்த நபர், டாஸ்மாக் மதுபான கடைகளில் அதிக விலையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அதைத்தொடர்ந்து, டாஸ்மாக்கில் மதுபானங்கள் விற்கப்படும்போது ரசீது வழங்கப்படுகிறதா..? தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் ஒட்டப்பட்டுள்ளதா..? அரசு நிர்ணயித்த விலையில் தான் மதுபானங்கள் விற்கப்படுகின்றதா..? என நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக ஜூன் 25-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.