சென்னை:
னியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் எடுக்க தடைவிதிக்கப்படுவதாக இன்று காலை செய்தியளார்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தற்போது,  தனது அறிவிப்பில் இருந்து  பின்வாங்கி உள்ளார்.
பள்ளிக்கு வரவழைத்து ஆன்லைனில் பாடம் எடுப்பதற்கே தடை என புது விளக்கத்தை தெரிவித்து உள்ளார்.
சுமார் 4 மணி நேரத்தில் அமைச்சர் தனது கருத்தை மாற்றி கூறி, பல்டியடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல தனியார் பள்ளிகள் தற்போதே மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் கல்வி போதித்து வருகிறது. ஹோம் ஒர்க்கும் கொடுத்து வருகிறது. மேலும், ஜூன் 1 முதல் பெரும்பாலான தனியார்பள்ளிகள் இணையவழி வகுப்புகள் நடத்த தயாராகி உள்ளன.
இந்த நிலையில்தான் இன்று காலை  செய்தியாளர்களை சந்தித்த தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கக் கூடாது. அவ்வாறு இணையவழி மூலம் பாடங்கள் எடுக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது முடக்கத்தின் போது கல்விக் கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஆனால், தற்போது தனது கருத்தை மாற்றி கூறி உள்ளார்.
தனியார் பள்ளிகள் ஆன்லைனில் வகுப்புகள் எடுக்க தடை இல்லை. ஆசிரியர்களை பள்ளிக்கு வரவழைத்து ஆன்லைனில் பாடம் எடுப்பதற்கே தடை  என்று தெரிவித்து உள்ளார்.
சுமார் 4 மணி நேரத்திற்குள்  அமைச்சர் செங்கோட்டையன், தனது நிலையில் இருந்து பின்வாங்கி உள்ளார்.
அவரது தடுமாற்றம் ஆளும் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.