13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அபாய நாளா?

 

ன்று 13 ஆம் தேதி மற்றும் வெள்ளிக்கிழமை சேர்ந்து வருவதால் இது அபாய நாள் என சிலர் நம்புகின்றனர்.

உலகெங்கும் உள்ள மக்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு நம்பிக்கை உள்ளது.   உதாரணமாக தென் இந்தியாவில் செவ்வாய்க்கிழமை நல்ல நாள் இல்லை என பலர் கருதுகின்றனர்.   அதே  செவ்வாய்க்கிழமையை வட இந்தியர் மங்கள வாரம் என அழைத்து பல சுப காரியங்களை நிகழ்த்துகின்றனர்.   இவ்வகையில் மேல் நாட்டினர் 13ஆம் தேதியை கெட்ட நாள் என கருதுகின்றனர்.  அத்துடன் அதோடு வெள்ளிக்கிழமை அன்று 13ஆம் தேதி வந்தால் அது அபாயமான நாள் என பலரும் பயந்து வருகின்றனர்.

ஆனால் காலத்தின் சுழற்சியில் இந்த 13ஆம் தேதியுடன் வெள்ளிக்கிழமை வருவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.  இன்றைய கிழமை வெள்ளி மற்றும் தேதி ஏப்ரல் 13 என்பது குறிப்பிடத்தக்கது.    அதே போல இந்த வருடம் ஜுலை 13ஆம் தேதியும் வெள்ளி அன்று வருகிறது.   பல வெளிநாட்டு ஓட்டல்களில் அறை எண் 12 க்குப் பிறகு 12 ஏ எனவும் அதன் பிறகு 14 எனவும் வரிசையில் உள்ளன.

இந்த 13 ஆம் தேதி பற்றிய நம்பிக்கைக்கு என்ன காரணம் என்பது தெளிவாக தெரியவில்லை.   ஏசு கிறிஸ்துவின் கடைசி இரவு உணவு (லாஸ்ட் சப்பர்) நடந்த போது 13 பேர் கலந்துக் கொண்டனர் எனவும் அன்று வெள்ளி எனவும் சிலர் கூறுகின்றனர்.  அத்துடன் ஏசுவை காட்டிக் கொடுத்த யூதாஸ் என்பவர் அந்த விருந்தின் 13 ஆம் விருந்தாளி எனவும் கூறப்படுகிறது.

அத்துடன் மேல்நாட்டினர் 13ஆம் தேதி அன்று திருமணம் போன்ற நிகழ்வுகளை பொடுவாக நடத்துவதில்லை.  அத்துடன் பல மாடிக் கட்டிடங்களில் 13ஆம் மாடியில் வசிக்க யாரும் விரும்புவதில்லை.

இதுவரை இது குறித்து சரியான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை எனினும் இந்த வெள்ளிக்கிழமையும் 13 ஆம் தேதியும் இணைந்து வரும் நாள் குறித்த அச்சங்கள் இன்னும் தொடர்கின்றன.
English Summary
Is the date 13th and friday combination is bad?