டில்லி:

எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக தமிழகத்தில் 33 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், மற்ற மாநிலங்களைக்காட்டிலும், தமிழகத்தில்தான் அதிகம் பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும்  தேசிய புலனாய்வு முகமை ஐஜி அலோக் மிட்டல் தெரிவித்து உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உ ள்ளது.

தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கடந்த 1998ம் ஆண்டு நடைபெற்ற கோவை குண்டுவெடிப்புக்கு பிறகு, தமிழகத்தில் உள்ள பயங்கரவாத அமைப்புகள், அதைச்சார்ந்தவர்கள் கூட்டோடு அகற்றப்பட்டனர். மத்திய மாநில அரசுகள் பயங்கரவாதிகள், அவர்களுக்கு உதவுபவர் கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வந்தது.

ஆனால், சமீப ஆண்டுகளாக தமிழகத்தில் இந்து அமைப்பினர் கொடூரமாக கொல்லப்பட்டு வந்த சம்பவங்கள் தமிழகத் தில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதற்கிடையில், சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது  நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், குண்டுவெடிப்புக்கு முன்னதாக பயங்கரவாதிகள் பலர் தமிழகத்தில் முகாமிட்டிருந்ததாக கூறப்பட்டது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது.

ஆனால், இதுகுறித்து ரகசிய விசாரணை நடத்தி வந்த தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள் பலமுறை அதிரடி சோதனை மேற்கொண்டு பலரை கைது செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

பயங்கரவாதிகள் பலர் தமிழகத்தில் தலைமறைவாக இருந்து வந்ததும், பலர் ஐஎஸ், முகாகிதீன் போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்பட்டது.  ஆனால், மாநில அரசு இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது.

இந்த நிலையில், டில்லியில் நடைபெற்ற தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ)  கூட்டம் நடைபெற்றது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தேசிய புலனாய்வு முகமை இயக்குநர் யோகேஷ் சந்தர் மோடி உட்பட பல முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கோவையில் கைது செய்யப்பட்ட ஐஎஸ் ஆதரவாளர்

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தேசிய புலனாய்வு முகமை இயக்குனர் மிட்டல்,  கடந்த ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில்  கிறிஸ்தவ ஆலயங்கள் உட்பட பல்வேறு இடங்களில் குண்டுகள் வெடித்தன. இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், ஐஎஸ்ஐஎஸ் அமைப் பைச் சேர்ந்த சிலர் இந்தியாவில் இருந்து செயல் பட்டது தெரிய வந்தது. இதை  தேசிய புலனாய்வு முகமையும் உறுதி செய்தது. அதைத்தொடர்ந்தே, தமிழகம், கேரளா உள்பட பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி விசாரணை மற்றும் சோதனை மேற்கொண்டனர். அப்போது பலர் கைது செய்யப்பட்டனர்.

நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசாரணையின்பேரில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கர வாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக இதுவரை 127 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இதில் அதிகப்பட்சமாக 33 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். உத்தரப் பிரதேசத்தில் 19 பேரும், கேரளாவில் 17 பேரும், தெலங்கானாவில் 14 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம், கேரளாவில் கைது செய்யப்பட்ட தீவிரவாத இயக்க ஆதரவாளர் கள், ஜஹ்ரான் என்பவரின் வீடியோ உரை களைக் கேட்டுதான் தாங்கள் தீவிர வாத எண்ணத்துக்கு வந்ததாக தெரிவித் துள்ளனர். இலங்கை வெடிகுண்டு தாக்குதலில் தற்கொலைப் படையாக செயல்பட்டது ஜஹ்ரான் ஹசீம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தமிழக – கர்நாடக எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மலைப்பகுதியில், ஜேஎம்பி அமைப்பினர், ராக்கெட் லாஞ்சர் சோதனை களை நடத்தியுள்ள தகவலும் விசாரணை யில் தெரியவந்துள்ளது. மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் தாக்கப்பட்ட தற்கு பழி தீர்க்க, புத்த வழிபாட்டு தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த ஜேஎம்பி அமைப்பு திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தேசிய புலனாய்வு முகமையின் இந்த அறிவிப்பு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் பயங்கரவாதி களின் கூடாரமாக மாறி  வருகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. தமிழக காவல்துறை தீவிரமாக செயல்பட்டு, இதுபோன்ற பயங்கரவாதத்துக்கு ஆதரவாளர்களை முலையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.