சென்னை:

மிழகத்தில் இன்றுமுதல் 3 புதிய பாசஞ்சர் ரயில் சேவை தொடங்குகிறது. இந்த ரயில் சேவையை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்

1) சேலம் – கரூர் பாசஞ்சர் ரயில் சேவை

2) பழனி – கோயம்புத்தூர் பாசஞ்சர் ரயில் சேவை

3) பொள்ளாச்சி – கோயம்புத்தூர்  பாசஞ்சர் ரயில் சேவை

கரூரிலிருந்து பகல் 11.40க்கு புறப்படும் ரயில் சேலத்திற்கு மதியம் 1.25 மணியளவில் வந்து சேர்கிறது. பின்பு சேலத்தில் இருந்து மதியம் 1.40 மணியளவில் புறப்படும் ரயில், கரூருக்கு மதியம் மாலை 3.25 மணிக்கு சென்றடைகிறது.

அதைப்போன்று கோவையிலிருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்படும் ரயில், மாலை 4.40 மணிக்கு பழனி செல்லும் என்றும், பழனியில் இருந்து காலை 10.45 செல்லும் ரயில் மதியம் 2.10 மணிக்கு கோவை சென்றைடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் ரயில், காலை 8.40 மனிக்கு கோவைக்கு சென்றடையும் என்றும், கோவையிலிருந்து காலை 5.45 மணிக்கு தொடங்கும் ரயில் காலை 7 மணிக்கு பொள்ளாச்சி வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் சேவையை காணொலிக் காட்சிமூலம் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் இன்று தொடங்கி வைக்கிறார்.