சென்னை,
சென்னையில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர்.
ஏற்கனவே மைலாப்பூரை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு நிலையில், தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளித்து வந்ததாக சென்னை மண்ணடியைச் சேர்ந்த ஆரூண் என்பவரை அதிகாலையில் ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கொடூரமான பயங்கரவாதிகளான ஐஎஸ் பயங்கரவாதிகள் இந்தியாவிலும் குழப்பத்தை ஏற்படுத்த பல்வேறு சதி செயல்களில் ஈடுபட்டு வருவதாக வந்த தகவல்களை தொடர்ந்து மாநிலங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தலைநகர் டில்லியில் ஐஎஸ் பயங்கரவாதி அமைப்பின் ஆதரவார்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடைபெற் ற விசாரணையை தொடர்ந்து கேரளாவிலும் ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவு அளித்து வந்த பலர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து நடைபெற்ற விசாரணையை தொர்ந்து, தமிழகத்தை சேர்ந்த சிலரும் ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த இக்பால் என்ற வாலிபர் டில்லியில் கைது செய்யப்பட்ட ஐஎஸ் ஆதரவாளர்களுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் ரகசியமாக தேடி வந்துள்ள நிலையில், கும்மிடிப்பூண்டி பகுதியில் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருடன் இக்பாலும் சிக்கியது தெரியவந்தது.
இக்பாலை கைது செய்த, ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில், இக்பால் பணம் வசூலித்து ஐ.எஸ். இயக்கத்துக்கு அனுப்பி வைத்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து மண்ணடி பர்மாபஜாரில் ஆரூண் என்பவரை ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.