ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த தொகுதியில் அதிமுக முன்னிலைப் பெற்றிருப்பதும், எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த தொகுதியில் அதிமுக பின்தங்குவதும் புதிய கேள்வியை எழுப்பியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை, அதிமுக நேரடியாக போட்டியிட்ட சேலம் மற்றும் தேனி ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகளின் நிலவரங்கள் கவனிக்கப்பட வேண்டியவை.

தேனி மக்களவைத் தொகுதியில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார். முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த தொகுதியான சேலத்தில் அதிமுக சார்பில் சரவணன் என்பவர் போட்டியிட்டார்.

ஆனால், தற்போதைய வாக்கு எண்ணிக்கை சூழலில், சேலம் தொகுதியில் தொடக்கம் முதலே, அதிமுக வேட்பாளர் சரவணன் பின்தங்கியுள்ளார். ஆனால், தேனி தொகுதியிலோ, பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.

எனவே, இந்த முடிவுகளை வைத்து, அதிமுகவில் யாரின் கை ஓங்கியுள்ளது என்ற புதிய கேள்வி எழுந்துள்ளது.