புதுச்சேரி

த்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுச்சேரியில் போட்டியிடலாம் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியைப் பொறுத்தவரைத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுக்கு என்.ஆர்.காங்கிரஸ் விட்டுக் கொடுத்துள்ளது.  மேலும் பிரபலமான நபரை வேட்பாளராகத் தேர்ந்தெடுக்குமாறு முதல்வரும், கூட்டணி கட்சி தலைவருமான ரங்கசாமி பாஜகவுக்கு யோசனை தெரிவித்தார்.

பாஜகவின் வேட்பாளர் தேர்வில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுவை அமைச்சர் நமச்சிவாயம், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.பி.ராமலிங்கம், சிவசங்கரன் ஆகிறாரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இதுவரை யார் வேட்பாளர்? என்பது இறுதி செய்யப்படாத நிலையில் 2-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட பாஜக தயாராகி வருகிறது.

நேற்ற் மாலை புதுவை முதலியார்பேட்டையில் உள்ள சுகன்யா கன்வன்சன் சென்டரில் நேற்று மாலை பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அக்கார்டு ஓட்டலில் தங்கி இருந்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை முதல்வர் ரங்கசாமி மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்.

கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நிலவரம், புதுவை தொகுதியில் பா.ஜனதா சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும்? என்பது குறித்தும் பேசியதாகக் கூறப்படுகிறது.