கார்த்தி சிதம்பரம் கைது?

Must read

டில்லி:

மலாக்கத்துறை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது மும்பையைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு முறைகேடாக அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்ததாக புகார் கூறப்பட்டது.

இதற்காக ப.சிதம்பரத்துக்கு பணப்பலன் கிடைத்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த சி.பி.ஐ.. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.

இந்த நிலையில் அமலாக்கத்துறை கார்த்தி சிதம்பரம் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் இன்று வழக்கு பதிவு செய்துள்ளது.

இதையடுத்து கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்படலாம் என்ற யூகம் எழுந்துள்ளது. தன் வீட்டில் சி.பி.ஐ. ரெய்டு நடந்த நிலையில் நேற்று முன்தினம் கார்த்தி சிதம்பரம் லண்டன் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன் வீட்டில், சி.பி.ஐ., சோதனை நடந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி, நேற்று காலை, திடீரென லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

மும்பையைச் சேர்ந்த, ‘ஐ.என்.எஸ்., மீடியா’ என்ற, ‘டிவி’ நிறுவனத்திற்கு, வெளிநாடுகளில் இருந்து, 305 கோடி ரூபாய் முதலீடு கிடைத்தது.  இதை, 4.62 கோடி ரூபாயாக குறைத்துக் காட்ட, 2007ல், உதவி செய்ததாகவும், அதற்காக ஆதாயம் பெற்றதாகவும், ப.சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரம் மீது புகார் எழுந்தது.

இது குறித்து, கார்த்தி சிதம்பரம் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. அதை தொடர்ந்து, சில தினங்களுக்கு முன், சென்னையில் உள்ள அவரது வீடு உட்பட, நாடு முழுவதும், 16 இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதற்கிடையில், 2015 டிசம்பரில், கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில், வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை தொடர்பாக, மத்திய அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இது தொடர்பாக, அவர் மீது மேலும், நான்கு வழக்குகள் பதிவு செய்ய, சி.பி.ஐ.,க்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியானது.

இது தொடர்பாக, அவரையும், அவரது நண்பர்களையும், டில்லிக்கு அழைத்து விசாரிக்க, சி.பி.ஐ., முடிவெடுத்தது.

இந்நிலையில், நேற்று காலை, 5:30 மணிக்கு, பிரிட்டீஸ் ஏர்வேஸ் விமானத்தில், கார்த்தி சிதம்பரம், தன் நண்பர்கள் மூன்று பேருடன், பிரிட்டன் தலைநகர் லண்டன் சென்றார். அவர் தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுவது, சி.பி.ஐ., வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article