சென்னை,

சென்னை ஐகோர்ட்டிற்கு மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பு தேவையில்லை என சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் பெஞ்ச் தெரிவித்துள்ளது.

சென்னை ஐகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், வழக்கறிஞர்களின் தொடர்  போராட்டத்தை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டுக்கு மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதுதொடர்பான வழக்கு இன்று நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, கோர்ட்டுக்கு மத்திய பாதுகாப்பு படை தேவையா என  கேள்வி எழுப்பி உள்ளனர்.

அப்போது அவர்கள்,  இது மக்கள் அன்றாடம் வந்து செல்லும் நீதிமன்றம். ராணுவ நீதிமன்றம் அல்ல, மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பால் கோர்ட்டிற்கு வந்து செல்லும் ஊழியர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இது ராணுவ கோர்ட் கிடையாது. இது மக்களின் கோர்ட் என்று  கூறினர்.

ஐகோர்ட்டுக்கு  மத்திய படை பாதுகாப்பு அளிக்க ஆண்டுக்கு ரூ.63 கோடி செலவாகிறது . சட்டம் ஒழுங்கை பாதுகாக்க சி.ஐ.எஸ்.எப்  இலவசமாக பாதுகாப்பு வழங்க வேண்டியது தானே ? எனவும் தலைமை நீதிபதி ரமேஷ் கேள்வி எழுப்பினார்.

அதைத்தொடர்ந்து  விசாரணையை வரும் ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. அப்போது, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு வழக்கறிஞருக்கு ஐகோர்ட்டு பெஞ்ச் உத்தர விட்டது.

கடந்த 2015ம்  நவம்பர் மாதம் முதல் சென்னை ஐகோர்ட்டுக்கு மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.