வோடபோன் – ஐடியா இணைந்தன!

Must read

 

டில்லி,

ங்கிலாந்தைச் சேர்ந்த வோடபோன் நிறுவனமும், இந்தியாவின்  ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஐடியா செல் போன் நிறுவனமும் இணைந்து செயல்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக  இன்று அறிவித்துள்ளன.

கடந்த  ஜனவரி மாதமே இதற்கான ஆரம்பக்கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று இணைப்பு குறித்து இறுதியான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

இணைப்புக்குப் பிறகான புதிய நிறுவனத்தின் 45.1% பங்குகள் வோடஃபோன் வசம் இருக்கும் என்றும்,  ஏற்கெனவே 4.9% பங்குகளை, வோடபோன் நிறுவனம் ரூ.38.74 பில்லியன் தொகைக்குத் தங்களுக்கு விற்றுவிட்டதாக ஐடியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த இணைப்பின் மூலம் இந்தியாவில் அதிகம் வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாக இப்புதிய நிறுவனம் விளங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த இணைப்பின் காரணமாக சுமார்  77,500-80,000 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐடியா நிறுவனத்துக்கு, புதிய நிறுவனத்தின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக  குமாரமங்கலம் பிர்லா இந்த புதிய நிறுவனத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும்  இந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி வோடபோன் நிறுவனத்தால் நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு நிறுவனங்கள் சார்பாக தலா 3 டைரக்டர்கள் இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  நிர்வாகி அதிகாரிகள் நியமிக்கப்பட இருக்கும்போது இரு நிறுவனத்தின் ஒப்புதலும் பெறப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வோடபோன், ஐடியா இரண்டு நிறுவனங்களின் பங்குகளும் குறிப்பிட்ட காலத்துக்கு சம அளவிலேயே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு அறிவிப்பு வெளியானதற்குப் பிறகு ஐடியா நிறுவனத்தின் பங்குகள் 14.25% அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் 24 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஏற்கனவே பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லை பின்னுக்கு தள்ளி உள்ளது.

மேலும், இந்த இணைப்பு, தற்போது அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ரிலையன்ஸ் ஜியோவுக்கு பின்னடவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

Latest article