வாழ்நாள் தடை விதிக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை!: சசிகலா உள்ளிட்டோருக்கு சிக்கல்!

Must read

டில்லி:

ண்டனை பெற்ற குற்றவாளிகள், வாழ்நாள் முழுதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருப்பது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா உள்ளிட்டோருக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்போது குற்றவழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள்  ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை இருக்கிறது. இந்த நிலையில்,  தண்டனை பெற்ற குற்றவாளிகள் வாழ்நாள் முழுவதும் போட்டியிட தடை விதிக்கக்க வேண்டும் என்று கோரி, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதை ஆமோதித்து,  தண்டனை பெற்ற குற்றவாளிகள் வாழ்நாள் முழுவதும் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இந்த பரிந்துரையை உச்சநீதிமன்றம் ஏற்றால் வி.கே.சசிகலா செல்வகணபதி உள்ளிட்டோர் வாழ்நாள் முழுதும தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.

More articles

Latest article