சென்னை:

ரசியல் கட்சி தொடங்கப்போவதாகவும், அரசியலுக்கு வரப்போவதாகவும் பூச்சாண்டி காட்டி வந்த ரஜினி, அதுகுறித்து தெளிவாக அறிவிக்காமல் எப்போதும்போல மீண்டும் மக்களை குழப்பத்தில் ஆழ்த்திவிட்டு, செய்தியாளர்களின் கேள்விகளுக்குபதில் அளிக்க மறுத்து விட்டு, தனது கருத்து இதுதான் என பொதுக்கூட்டத்தில் பேசுவதுபோல பேசிவிட்டு…. ‘அண்ணாத்த’வில் நடிக்க கிளம்பி விட்டார்… ஆனால், அவரை நம்பிய  ரசிகர்கள்தான் தெருவில் நிற்கின்றனர்…

இன்றைய அவரது செய்தியாளர் சந்திப்பு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  அரசியல் கட்சி தொடங்குவது குறித்து 3 திட்டங்களை வைத்திருப்பதாகக் கூறியவர், அரசியலில் மாற்றம் கொண்டு வருவதே தனது ஆசை என்றும் தெரிவித்தவர், இறுதிவரையில் தான் அரசியலுக்கு உறுதியாக வருவேன் என்பதை தெரிவிக்க மறுத்து விட்டார்…

ரஜினி கூறிய 3 திட்டங்கள் என்னென்ன?

1. தேர்தல் நேரத்தில் மட்டுமே கட்சி தொண்டர்களுக்கு  வேலை

தமிழகத்தில் இரு பெரிய கட்சிகளில் 50,000க்கும் மேல் கட்சிப் பதவிகள் இருக்கிறது. தேர்தல் நேரத்தில் மட்டுமே அது தேவை. மற்ற நேரங்களில் அது தேவையில்லை. தேர்தலில் வெற்றி பெற பிறகு அவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். அது நாட்டுக்கும் மக்களுக்கும் பாதிப்பு. எனவே, வீட்டு வேலைக்கு ஆட்களை நியமிப்பது போன்று, தேர்தல் பணி நேரத்தில் மட்டுமே கட்சி பணியாளர்களுக்கு வேலை வழங்கப்படும்.

2. 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை

கட்சி பதவிகளில் 60 முதல் 65% பணியிடங்கள் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.

3. ஆட்சிக்கு ஒரு தலைமை, கட்சிக்கு ஒரு தலைமை

தேசியக் கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகளில் ஆட்சிக்கும், கட்சிக்கும் அவர் தான் தலைவர். இதனால் கட்சியில் இருந்து யாரும் கேள்வி கேட்க முடியாது. கொள்கைகள் தான் கட்சி. அதைவைத்து தான் கட்சி சொல்கிறது. கட்சியின் கொள்கைகளை ஆட்சிக்கு வந்த பிறகு செயல்படுத்த வேண்டும்.

அனைத்துத் துறையிலும் அனுபவம் உள்ளவர்களை வைத்து ஒரு குழு அமைத்து. அந்தக்குழு சொல்வதை ஆட்சித் தலைமை செயல்படுத்த வேண்டும். இது எனது திட்டம் என்று தெரிவித்தார்.

எல்லாம் சரிதான்….  இதையெல்லாம் யாருக்காக கூறினார் ரஜினி….

தனது கட்சி இதுதான், இந்த நாள்முதல் கட்சியை தொடங்குகிறேன், தேர்தலில் போட்டியிடுவேன் என அறிவிக்க தயங்கி, தனக்கு முதல்வராக ஆசை கிடையாது என்றும், தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் மக்களிடையே எழுச்சி உருவான பிறகு நான் வருகிறேன் என்று கூறி மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றி உள்ளார்…

தனது கட்சி குறித்து தைரியமாக அறிவிப்பு வெளியிட பயந்து வரும் ரஜினி… தனது பணத்தில் இருந்து சல்லிக்காசுகூட செலவழிக்க தயங்குவதும் இன்றைய அவரது பேச்சில் தெரிய வருகிறது….

ஏற்கனவே அவரது மனைவி லதா, அரசு கடயை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, அதற்கு உரிய வாடகை கட்டாமல் நீதிமன்றம் குட்டியதும், அவரது பள்ளியில் வேலை செய்துவரும் தொழிலாளர்களுக்கு சரியான முறையில் ஊதியம் வழங்காததும் தமிழக மக்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்…

இதுபோன்ற ஒரு குடும்பத்தில் சிக்கி உள்ள ரஜினியாவது  அரசியலுக்கு வருவதாவது…

தனதுக்கு வயது 71 என்பதை இன்று நினைவுபடுத்திய ரஜினி…. படத்தில் இன்னும் கதாநாயகனாக டூயட் பாடும்போது மட்டும் அவருக்கு வயது நினைவில்லையோ….

தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வரும் ரஜினி மேலும் சில படங்களில் நடிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக திரையுலக தகவல்கள் வெளியாகி வருகின்றன… படத்தில் நடிப்பதால்  கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கும்… ஆனால் அரசியலுக்கு வந்தால் கோடிக்கணக்கான பணத்தை செலவழிக்க வேண்டியது வரும்…..   பணத்தை செலவழிக்க தான் தயாராக இல்லை என்பதை  இன்று வெளிப்படுத்தி உள்ள ரஜினி…. அதுக்கு சரிப்பட மாட்டார் என்பதே உண்மை….

அரசியலுக்கு வர விரும்பாத  ரஜினியின் 3 திட்டங்கள் யாருக்கு தேவை….  என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக கலாய்த்து வருகின்றனர்…

நான் முதல்வர் பதவியை விரும்பவில்லை… கட்சித் தலைவராக மட்டுமே இருப்பேன்,  “நல்ல, நேர்மையான,புதிய சிந்தனைகள், தன்மானம் உள்ள ஒரு இளைஞனை முதல்வராக்க விரும்புகிறேன்!  என்று ரஜினி தெரிவித்திருப்பதை நெட்டிசன்கள் 

அப்ப நீ?  நேர்மையானவன் இல்லை…. பொறம்போக்குதானே…  என்று கடுமையாக விமர்சித்து உள்ளனர். 

அரசியலுக்கு வருவதுபோல பல கட்சித் தலைவர்களை சந்தித்து பேசுவதாக பாவ்லா காட்டிய ரஜினி, இன்று அரசியலுக்கு சாத்தியப்படாத 3 திட்டங்களை ஏதோ ஒப்புக்கு சப்பானியாக அறிவித்துவிட்டு எஸ்கேப்பாகி உள்ளார்…

அப்போதே புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ரஜினி குறித்து சரியாகத்தான் கணித்திருந்திருக்கிறார்… தீர்க்கதரிசி

,,,,,,,,,,

வாசகர்களும், ரஜினி ரசிகர்களும் தங்களை சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்ளவே இந்த வீடியோ….