சென்னை: போஸ்கொடுத்தால் போதுமா, நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா என்றும் கேள்வி எழுப்பி உள்ளா கமல்ஹாசன், நரிக்குறவர்களுக்கு கடன் உதவி கிடைக்கவும், கடை நடத்தவும், வீடு கட்டித் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தி உள்ளார்.
மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியை சேர்ந்த நரிக்குறவப் பெண் அஸ்வினிக்கு கடந்த ஆண்டு தீபாவளி தினத்தின்போது முதலமைச்சர் வழங்கிய கடனுதவி தற்போது வரை தங்களு்கு கிடைக்கவில்லையென குற்றம்சாட்டியிருந்தார். “மேடையில் கடனுதவி கொடுப்பதுபோல போஸ் கொடுத்தார்கள். ஆனால், கடை இல்லை என்று கூறி, இதுவரை வங்கிக் கடன் தர மறுக்கிறார்கள்” என்று அஸ்வினியும், மற்ற நரிக்குறவர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கைகள் இதுவரை நிறைவேறவில்லை, “மேடையில் கடனுதவி கொடுப்பதுபோல போஸ் கொடுத்தார்கள். ஆனால், கடை இல்லை என்று கூறி, இதுவரை வங்கிக் கடன் தர மறுக்கிறார்கள்” என்று அஸ்வினியும், மற்ற நரிக்குறவர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிலையில், சுமார் 8 மாதங்களை கடந்த நிலையில், அவர்களுக்கு உதவிகள் கிடைக்காதது சலசலப்பைஏற்படுத்தியது.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தமிழக அரசையும், முதல்வரையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
போஸ் கொடுத்தால் போதுமா; கடன் கொடுக்க மாட்டீர்களா? கதறும் நரிக்குறவர்களின் கண்ணீரை துடைக்குமா அரசு? என கேள்வி எழுப்பி உள்ளது.
மேலும், இதுதொர்பாக பதிவிட்டுள்ள டிவிட்டில், மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியை சேர்ந்த நரிக்குறவப் பெண் அஸ்வினி கடந்த ஆண்டு கோயிலில் அன்னதானம் சாப்பிடச் சென்றபோது, விரட்டியடிக்கப்பட்டார். இதுகுறித்த வீடியோ வைரலானதையடுத்து, முதல்வரே நேரில் சந்தித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆனால், அவர்களுக்கு இன்னும் தீர்வுகிடைக்கவில்லை.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், அமைச்சர்களிடம் முறையிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மக்கள் மத்தியில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், நரிக்குறவர்களுக்கு கடனுதவி கிடைக்கவும், கடை நடத்தவும், வீடு கட்டித் தரவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு, சாமானிய மக்களின் குறைகளைத் தீர்க்க வேண்டுமென மநீம வலியுறுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.