கொழும்பு: இலங்கையில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் பங்கேற்கும் வகையில், இந்திய அணி இலங்கை சுற்றுப்பயணம் செய்வதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய அணியின் இலங்கை சுற்றுப் பயணம் ஜுன் மாதத்தில் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா காரணமாக அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், இத்தொடர் ரத்தானது.

ஆனாலும், இலங்கை வீரர்கள் தங்களின் பயிற்சியைத் துவக்கியதால், இந்திய அரசு அனுமதியளிக்கும் பட்சத்தில், இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய அணி இலங்கைக்குச் செல்லலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான பத்திரிகை செய்திகளும் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், தொடரை நடத்துவதற்கு அனுமதி கேட்டு, இலங்கை கிரிக்கெட் வாரியம், அந்நாட்டு அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. அனுமதி கிடைத்தப் பிறகு, போட்டிக்கான தேதிகளும் இடங்களும் முடிவாகும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஒருநாள் & டி-20 தொடர்களில் 1 மீட்டர் இடைவெளிவிட்டு, போட்டியைக் காண்பதற்கு ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.