சென்னை: மாநில உரிமை குறித்து திமுக பேசுவது விநோதமாக உள்ளது மே 7 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த தமிழக அரசு அனுமதி கொடுக்காத நிலையில், சென்னை பெசன்ட் நகர் பேருந்து நிலையம் முன்பு நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த சென்ற திருமுருகன் காந்தி உள்பட மே7இயக்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் அடைக்கப்பட்டனர்.
இதுகுறித்து, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், “நினைவேந்தல் நடத்த முயன்றதற்காக 100-க்கான தோழர்களுடன் கைதாகி உள்ளோம். படுகொலையான தமிழர்களுக்கு நினைவேந்தும் உரிமையைக் கூட உறுதி செய்யாத திமுக அரசு, மாநில உரிமை குறித்து பேசுவது விநோதமானது” என காட்டமாக பதிவிட்டு உள்ளார்.