பாஜக இணையதளம் முடக்கமா? : அதிர்ச்சி தகவல்கள்

Must read

டில்லி

பாஜக இணைய தளம் கடந்த 12 நாட்களுக்கும் மேலாக முடக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆம் தேதி முதல் பாஜக இணைய தளத்தை பார்வை இட முடியாத நிலை உள்ளது. அன்று பிரதம்ர் மோடி மற்றும் ஜெர்மனி அதிபர் அஞ்சலா மெர்கல் ஆகியோர் உள்ள மீம் வெளியானது . அதன் பிறகு அந்த இணைய தளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால் இது தவறானது எனவும் இந்த ஐடி யாராலோ முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 12 ஆம் தேதி அன்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பாஜக இணைய தளம் மிகச் சில நிமிடங்களே முடக்கப்பட்டதாகதெரிவித்தார். இது குறித்து அவர், “நாட்டில் பல விஷமிகள் உலவி வருகின்றனர். அவர்களால் ஒரு சில நிமிடங்கள் முடக்கப்பட்டது. வெகு விரைவில் இணைய தளம் நமது கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத பாஜக பிரமுகர் ஒருவர், “ஒரு சில மணி நேரங்களில் முடக்கப்பட்ட இணைய தளம் மீட்கப்பட்டது. ஆனால் நாங்கள் இதை பயன்படுத்தி இணைய தளத்தை மேம்படுத்த முயற்சி செய்தோம். கடந்த ஐந்து வருடங்களாக இணைய தளம் மேம்படுத்தப்படவில்லை. எனவே கடந்த இரண்டு மூன்று மாதங்களாகவே இந்த எண்ணம் எங்களுக்கு உள்ளது.

இது குறிட்து சைபர் வல்லுனர்கள், “பாஜக இணையதளம் முழுவதுமாக வடிவமைக்கப் பட வாய்ப்புள்ளது . இதற்கு காரணம் அனைத்து விவரங்களும் சேமிக்கப்படாமல் இருந்திருக்கக் கூடும். அதனால் ஆரம்பத்தில் இருந்து இணைய தளத்தை அமைக்கும் பணியை அவர்கள் செய்திருக்கலாம்.” என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அரசின் இணைய தளம் மட்டுமின்றி ஆளும் கட்சியின் இணைய தளமும் முடக்கபடுவ்தாக விமர்சனம் செய்துள்ளனர். இது குறித்து, “நாட்டின் காவல்காரரால் தானது கட்சியின் இணைய தளத்தையே காப்பாற்ற முடியாத நிலையில் உள்ள போது நாம் வேறு எதை அவரிடம் எதிர்பார்க்க முடியும்?” என விமர்சிக்கின்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article