ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துள்ள திரைப்படம்  ‘இருமுகன்’.  இதில்  விக்ரம் இரு வேடங்களில் நடித்துள்ளார். 
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா  சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிவகார்த்திகேயனும், நிவின் பாலியும் கலந்து கொண்டார்கள்.
a
விக்ரம்  பேசும்போது, “நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ்த் திரையுலகில் மென்மேலும் உயர்வார்..! அவர் இன்னமும் பெரிய ஆளாக வருவார். அவர் ‘ரெமோ’ வில் நடித்தது எனக்கு மகிழ்ச்சி. 
நான் ரெமோவாக இருந்தது கடந்த காலம். இனிமேல் சிவாதான் ரெமோ. நான் செய்தது ஊறுகாய் மாதிரி, அவர் பிரியாணியே போடுவார்” என்று மனதார வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
b
மேலும், “நான் ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் அது ரசிகர்களுக்கு  பிடிக்குமா என்று பார்த்துதான் செய்வேன். அப்படித்தான் என் ஒவ்வொரு படத்தையும், கதையையும் தேர்ந்தெடுக்கிறேன்.  இந்தப் படமும் ரசிகர்களாகிய உங்களுக்குப் பிடிக்கும் என்றே நம்புகிறேன்.
நான் மட்டுமல்ல.. இயக்குநர் ஆனந்த் சங்கரும் இந்தப் படத்துக்காக ஒன்பது மாதங்கள் காத்திருந்தார். இந்தக் கதையை எடுக்கலாம் என்று முடிவான பிறகு பெரிய ஹீரோவை வைத்து இயக்க அவருக்கு வாய்ப்பு வந்தது. அது தர்மமல்ல என்று எனக்காகக் காத்திருந்தார் அவர்” என்று நெகிழ்ந்த விக்ரம், “நான் இந்த படத்தில்  முதன்முதலில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறேன். அந்த பாத்திரத்தை வேறொருவர் செய்வதாக இருந்தது. ஏன் நாமே செய்தால் என்ன என்று தோன்றியது.  நடித்தேன்” என்றவர், இயக்குநர் ஒளிப்பதிவாளர், தாயாரிப்பாளர் என்று ஒவ்வொருவரையும் வியந்து புகழ்ந்தார். 
பிறகு, “நயன்தாரா பிரேமில் இருக்கும்போது ஒரு மேஜிக் நடக்கும்.   இந்த படத்திலும்  எங்கள் இருவருக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது” என்றார் மகிழ்ச்சியோடு. 
மகிழ்ச்சி!