சென்னை: ரெயில்  பயணத்தின்போது, பயணிகள் வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதி விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக ஐஅர்சிடிசி தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில், ரயில் பயணிகளுக்கு தேவையான உணவு மற்றும் நொறுக்குத்தீனிகளை, ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம்  தயார் செய்து வழங்கி வருகிறது. இதற்காக தனி இணைய தளம் மற்றும் செல்போன் செயலி உள்ளது.

இதை மேலும் மெருமேற்கும் வகையில்,  வாட்ஸ்அப் மூலமும் உணவு ஆர்டர் செய்யும் வசதியை   அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளது.. இதை 2 கட்டங்களாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், முதல்கட்டமாக  சில குறிப்பிட்ட வழித்தடங்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. விரைவில்,  அனைத்து தடங்களிலும் வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதி அமல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருவழித் தொடர்பு அமைப்பில் +91-8750001323 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் பயணிகள் உணவை ஆர்டர் செய்யலாம். “பயணிகள் ரயில் எண்ணை டைப் செய்தால், ஸ்டேஷன் வாரியாக வழங்கப்படும் சேவைகள் காட்டப்படும்,  அதில்,  பயணிகள் தங்கள் விருப்பப்படி உணவை ஆர்டர் செய்யலாம்” என்று IRCTC அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்ந்தெடுக்கப்பட்ட சில ரெயில்களில் இ-கேட்டரிங் சேவைகளுக்கான வாட்ஸ்அப் சேவை அறிமுகப்படுத்தப் படுகிறது. வாடிக்கையாளர் கருத்து மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் மற்ற ரெயில்களிலும் இது அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.