பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த படம் ‘ஒத்த செருப்பு’. செப்டம்பர் 20-ம் தேதி வெளியானது.

பல்வேறு விருதுகளையும் இந்தப் படம் வென்றது. தற்போது, ஆஸ்கர் விருதுக்கு நேரடியாக அனுப்பி வைக்க பார்த்திபன் முயன்று வருகிறார்.

இதனிடையே, புத்தாண்டை முன்னிட்டு தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார் இயக்குநர் பார்த்திபன்.

ஒரே ஷாட்டில் முழுப் படத்தையும் எடுக்கவுள்ள அந்த படத்திற்கு ‘இரவின் நிழல்’ எனப் பெயரிட்டு, படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

‘இரவின் நிழல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் பாரதிராஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.