மோசூல் நகரம் மீட்பு : ஈராக் ராணுவம் கொண்டாட்டம்

மோசூல் நகரில் வீரர்கள் கொண்டாட்டம்

மோசூல்

எஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த மோசூல் நகரை ஈராக் ராணுவம் மீட்டதையொட்டி வீரர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஐ எஸ் தீவிரவாதிகள்,  ஈராக் ராணுவத்திடம் இருந்து மோசூல் நகரைக் கைப்பற்றினர்.  அது முதல் மோசூல் நகர் ஐ எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.  அதை மீட்க ஈராக் ராணுவம் போராடி வந்தது.

தற்போது அமெரிக்க கூட்டுப்படை ஈராக் ராணுவத்தினருக்கு உதவி வருகிறது.   அந்த உதவியுடன், ஈராக் ராணுவத்தினர் ஐ எஸ் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள பல பகுதிகள மீட்டு வருகின்றனர்.

தற்போது மோசூல் நகரை ஐ எஸ் தீவிரவாதிகள்  மேல் அதிரடித் தாக்குதல் நடத்தி ஈராக் மீட்டுள்ளது.    மூன்று ஆண்டுகள் கழித்து மோசூல் நகரை மீட்டதால் மிக்க மகிழ்ச்சி அடைந்த ஈராக் ராணுவ வீரர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.


English Summary
Iraq military force is celebrating the victory of getting back Mosul city