கனடாவில் நடைபெற்று வரும் ஜி7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் ஓரிரு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பின்னர் அவசரமாக அமெரிக்கா திரும்பினார்.
இந்திய பிரதமர் மோடி வருகைக்கு முன்பே கனடாவில் இருந்து புறப்பட்ட டிரம்ப், “ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக” சென்றதாக பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் கூறினார்.
பிரெஞ்சு அதிபரின் இந்த தகவலை மறுத்துள்ள அதிபர் டிரம்ப், “பிரெஞ்சு அதிபர் எப்பொழுதும் போல் தவறாகவே புரிந்துகொண்டுள்ளார், நான் போர்நிறுத்தம் தொடர்பாக பேசுவரதற்காக வரவில்லை, அதைவிட அவசரமான வேலை உள்ளது. அதுகுறித்து விரைவில் அறிவிக்கப்படும்” என்று தனது சமூக வலைதளத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன்மூலம் இஸ்ரேல் ஈரான் இடையிலான மோதலில் நேரடியாக அமெரிக்காவை சண்டைக்கு இழுக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்தே அமெரிக்க அதிபர் டிரம்ப் அவசர அவசரமாக அமெரிக்கா திரும்பியதாகவும் நாடு திரும்பியதும் சூழ்நிலை அறையில் (Situation Room) ராணுவ தலைமை தளபதிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.