ஈராக்கிய சர்வாதிகாரி சதாம் உசேனுக்கு ஏற்பட்ட அதே கதிதான் ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கும் ஏற்படும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரித்துள்ளார்.

இஸ்ரேலிய இராணுவம் மற்றும் பாதுகாப்பு சேவைகளின் தளபதிகளுடனான சந்திப்பில் பேசிய காட்ஸ், “இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் போல நடந்து கொண்ட அண்டை நாட்டின் சர்வாதிகாரிக்கு என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்வோம்” என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

“போர்க்குற்றங்களைச் செய்து இஸ்ரேலிய பொதுமக்களுக்கு எதிராக தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வரும் ஈரானிய உச்ச தலைவருக்கு எதிர்காலம் குறித்து நாங்கள் எச்சரிக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

சதாம் 2003 ஆம் ஆண்டு அமெரிக்காவால் பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். 1991 வளைகுடாப் போரின் போது இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாகவும், ரகசிய அணு ஆயுதத் திட்டத்தை உருவாக்கியதாகவும் சதாம் ஹுசைன் அரசு மீது அப்போது குற்றம்சாட்டப்பட்டது.