ஈரான்:
ரான் அணுவிஞ்ஞானி ஷாஹ்ராம் அமிரிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

அணுவிஞ்ஞானி ஷாஹ்ராம் அமிரி குடும்பத்தினருடன்
அணுவிஞ்ஞானி ஷாஹ்ராம் அமிரி குடும்பத்தினருடன்

ஈரானின் பிரபல அணுவிஞ்ஞானி அமிரி. இவர்மீது முக்கியமான ரகசியங்களை அமெரிக்கா விற்கு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
7 ஆண்டுகளுக்கு முன்பு மெக்கா புனித யாத்திரிரைக்கு சென்ற அமிரி அங்கிருந்து காணாமல் போனார்.  அங்கிருந்து அமெரிக்கா சென்றதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில், அவர் தான், சி.ஐ.ஏ அதிகாரிகளால் கடத்தப்பட்டதாக கூறினார்.  பின்னர் அங்கிருந்து தப்பி ஈரானுக்கு வந்ததாக கூறினார். இதனால், அவர் ஈரான் திரும்பிய போது அரசு மற்றும் மக்களின் வரவேற்பை பெற்றிருந்தார்.
பின்னர் தன் சொந்த விருப்பத்தின் பேரிலே அமெரிக்கா சென்றதாகவும், மேலும் பல நல்ல பயனுள்ள தகவல்களை அமெரிக்கா தெரிவித்துள்ளது  என்றும் கூறினார்.
அணுவிஞ்ஞானி ஷாஹ்ராம் அமிரி காவலர்களுடன்
அணுவிஞ்ஞானி ஷாஹ்ராம் அமிரி காவலர்களுடன்

இதனால் ஈரான் அரசு அமிரிடம் விசாரணை மேற்கொண்டது.  முன்னுக்கு பின் முரணான அவரது பேச்சால், ஈரான் அரசு அவர்மீது சந்தேகம் கொண்டது. அமிரி காணாமல்போய் திரும்பி வந்தது பற்றி சு ரகசிய விசாரணை மேற்கொண்டது. விசாரணையில், அமெரிக்காவுக்கு அமிரி ஈரானை பற்றிய ரகசியங்களை கொடுத்ததாக ஈரான் அரசு குற்றம் சாட்டியது.
இதன் அடிப்படையில் அணுவிஞ்ஞானி, ஷாஹ்ராம் அமிரிக்கு  மரண தண்டனை விதித்து, அதை நிறைவேற்றி இருப்பதாக ஈரான் உறுதிப்படுத்தி உள்ளது.