இஸ்லாமாபாத்’

ஈரானின் தாக்குதலின் விளைவாக பாகிஸ்தானில் இருந்து  ஈரான் தூதர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

நேற்று முன் தினம் பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் அல்-அட்ல் (Jaish al-Adl) என்ற தீவிரவாத அமைப்பைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டதாக ஈரான் நாட்டு அரசு ஊடகம் தெரிவித்தது.  உலக நாடுகள் இடையே இந்த தாக்குதல் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அமைப்ப் சன்னி இஸ்லாமிய பிரிவைச் சேர்ந்ததாகு. இந்த அமைப்பினர், ஈரானின் சிஸ்டன் பலுசிஸ்தான் மாகாணத்தில் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருவதாக ஈரான் குற்றம் சாட்டி உள்ளது. குறிப்பாக, காவல் துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து ஜெய்ஷ் அல்-அட்ல் தாக்குதல் நடத்துவதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அந்த அமைப்பை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜாரா பலூச், “ஈரானில் உள்ள தனது தூதரை திரும்பப் பெற்றுக்கொள்ளப் பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானுக்கான ஈரான் தூதர் தற்போது தனது நாட்டுக்கு சென்றுள்ளார். தற்போதைக்கு அவர் பாகிஸ்தானுக்கு வர மாட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.