சேலம்:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே திறக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான  கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎஸ் போட்டி நடத்த முயற்சி எடுக்கப்படும் என்று சிஎஸ்கே தலைவர் இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன் கூறினார்.

தமிழகத்தின் மாங்கனி நகரமான  சேலம் மாவட்டத்தில் வாழப்பாடியை அடுத்து உள்ள  காட்டுவேப்பிலைப்பட்டி யில் 16 ஏக்கரில் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம் உலக தரத்தில் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் அமைத்துள்ளது.  ரூ.8 கோடி செலவில்  சுமார் 16 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து காணப்படும் இந்த மைதானம் சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மலையடிவார சூழலில் இந்த கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ளது. இரண்டு ஆண்டுகள் அயராத உழைப்பில் உருவாகியுள்ள இந்த  மைதானத்தில் ஐந்து பிட்ச்சுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கிரிக்கெட் மைதானத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது

முதல்வர்  எடப்பாடி பழனிசாமி மைதானத்தை திறந்து வைத்து, கிரிக்கெட் வீரர்  ராகுல் டிராவிட் பந்து வீச, பேட்டிங் செய்து அசத்தினார்.

இந்த விழாவில் கலந்து கொண்ட சிஎஸ்கே நிறுவனர்  இந்தியா சிமெண்ட்ஸ் தலைவர் சீனிவாசன், விரைவில் இந்த மைதானத்தில் ஐபிஎஸ் போட்டிகள் நடத்த முயற்சி கொள்வேன் என்று கூறினார். தொடர்ந்து பேசியவர், இந்த மைதானத்தை பார்வையிட இந்திய கிரிக்கெட் அணியின் விரரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான தோனி, ஸ்டீஃபன் பிளமிங் போன்ற வீரர்களை அழைத்து வருவேன் என்றும், ஓராண்டுக்குள் இந்த மைதானத்தில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய முன்னாள்  கிரிக்கெட் வீரர், ராகுல் டிராவிட்,  இந்த மைதானத்தில் விளையாட தனக்கு ஆசை உள்ளது. இருந்தாலும், தற்போதைய நிலையில் தன்னால் விளையாட முடியாது என்றவர்,  இந்த மைதானம் பல்வேறு சிறந்த வீரர்களை உருவாக்க வாய்ப்பாக அமையும் என்று  நம்பிக்கை தெரிவித்தார்.

இனி வரும் காலங்களில் இதுபோன்று புறநகர்ப் பகுதிகளில் இருந்து தான் அதிகளவிலான திறமையான கிரிக்கெட் ஹீரோக்கள் உருவாக உள்ளனர். இதுபோன்று மைதானங்கள் உருவாவதால், அதிகளவிலான இளைஞர்களுக்கு விளையாட வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் அவர்களுடைய ஆரோக்கியம் வலுக்கிறது. விளையாட்டின் மூலம் தங்களின் வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது.

சேலம் வாழப்பாடியில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம்! திறந்து வைத்து கிரிக்கெட் ஆடினார் முதல்வர்

ஒருநாள் நானும் இங்கு கிரிக்கெட் விளையாடலாம், அதில் எனக்கும் ஆசைதான். ஆனால், எனக்கு வயதாகிவிட்டதால் அதற்கு சாத்தியமில்லை. எனவே இளம் அணிக்கு பயிற்சியளித்து அவர்களை இங்கு நிச்சயம் விளையாட வைப்பேன் என்று தெரிவித்தார்.

விழாவில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மின்சாரம், மதுவிலக்கு-ஆயத்தீா்வைத் துறை தங்கமணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ,  முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா கோபிநாத் மற்றும் பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.