ஐபிஎல் 2022: பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Must read

மும்பை:
பிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெறும் மும்பை – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்களை குவித்துள்ளது. மும்பை அணி தரப்பில் பசில் தம்பி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து 199 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் ராஜஸ்தான் – குஜராத் அணிகள் மோத உள்ளன.

More articles

Latest article