சென்னை:
ன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது.

135 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை, 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது. சென்னை அணியில் அதிகபட்சமாக
டெவன் கான்வே 77 ரன்கள் எடுத்தார்.

ஐபிஎல் தொடரில் இன்று மதியம் 3.30 மணி அளவில் நடக்க உள்ள போட்டியில் லக்னோ – குஜராத் அணிகளும், இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் மும்பை- பஞ்சாப் அணிகளும் மோத உள்ளன.