டில்லி

டில்லியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை டில்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கட் வித்தியாச்த்தில் வென்றது.

 

நேற்று டில்லியில் நடந்த ஐபிஎல் 2019 போட்டியில் டில்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதின. இதில் முதலில் பேட்டிங்கில் ராஜஸ்தான் அணி களம் இறங்கியது. இம்முறை டில்லி அணியில் வேகப்பந்து வீச்சாளரான இசாந்த் சர்மா தனது இரு போட்டிகள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் கலந்துக் கொண்டார். சிஎஸ்கே உடனான தோல்வியின் காரணமாகவே அவர் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவர் தமது ரிடர்னை மிகவும் கொண்டாடி 2 விக்கட்டுக்களை வீழ்த்தி ராஜஸ்தான் அணியை கலக்கத்தில் ஆழ்த்தினார். ராஜஸ்தான் அணியினருக்கு இது மிகவும் முக்கியமான போட்டி என்ற போதிலும் எந்த ஒரு வீரருமே அதை கருத்தில் கொள்ளாமல் விளையாடியதாகவே காணப்பட்டது. இதற்கு நட்சத்திர வீரர்கள் பட்லர், ஸ்மித், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் இல்லாத நிலைதான் என ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தான் அனி தனது முதல் 30 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள், அடுத்த 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள், அடுத்த 50 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. ராஜஸ்தான் அணியில் லிவிங்ஸ்டோன், கோபால், பராக் ஆகியோரைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்திலேயே ரன் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

அதே நேரத்தில் இந்த போட்டியில் இளம் வீரரான ரியான் பராக் அரை சதம் அடித்து புதிய சாதனை புரிந்துள்ளார். இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் குறைந்த வயதில் அரை சதம் அடித்த முதல்வீரர் ரியான் பராக் ஆகும். ராஜஸ்தான் அணியை பொறுத்த வரை அந்த அணியினருக்கு நேற்று இந்த ஒரு பெருமை மட்டுமே கிடைத்தது. ராஜஸ்தான் அணி 9 விக்கட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்தது.

அடுத்து களம் இறங்கிய டில்லி கேபிடல்ஸ் அணிக்கு 116 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர்களான தவண் மற்றும் பிரித்வி ஷா அதிரடி ஆட்டத்துடன் ஆரம்பித்தனர். தவண் தனது 16 ஆம் ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பிரித்வி ஷா வெளியேறினார். அடுத்து ஷ்ரேயாஸ் ஐயர் – ரிஷப் பந்த் அணி விளையாடியது..

 

ஆட்டத்தின் 6-வது ஓவரில் சோதியின் பந்துகளில் அய்யர் இரு சிக்ஸர்களையும், பந்த் பவுண்டரியும் விளாசினர். அத்துடன் பவர்ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 42ரன்கள் சேர்த்தது டெல்லி அணி. ரியான் பராக் வீசிய 7வது ஓவரில் ரிஷப் பந்த் 2 சிக்ஸர்களை அடித்தார். அதைப்போல் கோபால் வீசிய 8-வது ஓவரில் அய்யர் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். டில்லி அணி 10 ஓவர்களி்ல 3 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் சேர்த்திருந்தது.

அடுத்து வந்த இங்ராம், உடன் இணைந்த ரிஷப் பந்த் நிதானமாக பேட் செய்தார்ர். ஆயினும் சோதி வீசிய 14-வது ஓவரில் இங்ராம் 12ரன்னில் வெளியேறினார். அவரை அடுத்து ரூதர்போர்ட் களம் இறங்கினார்.. 15-வது ஓவரில் ஆரோன் பந்து வீச்சில் ரிஷப்பந்த் சிக்ஸர் , பவுண்டரி அடித்து ரன் வேகத்தை கூட்டினார்.

 

16 ஆம் ஓவரில் கோபாலின் பந்து வீச்சில் ரிஷப் பந்த் ஒரு சிக்சரும் ரூதர் ஒரு சிக்சரும் அடித்தனர். ஆனால் ரூதர் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். டில்லி அணியின் வெற்றிக்கு ஒரே ரன் தேவைப்பட்ட நிலையில் 17 ஆம் ஓவரில் சோதி பந்து வீச வந்தார். அந்த ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்த ரிஷப் பந்த் டில்லி அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

அதை ஒட்டி டில்லி கேபிடல்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதாக அறிவிக்கப்பட்டது..

ஆட்ட நாயகனாக டில்லி அணியின் அமித் மிஸ்ரா தேர்தெடுக்கப்பட்டார்