பெங்களூரு

பிஎல் 2019க் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தோற்கடித்துள்ளது.

நேற்று ஐபிஎல் போட்டியில் லீக் ஆட்டத்தில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோதியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாசில் வெற்றி பெற்று பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கில் களமிறங்கிய பெங்களூரு அணியின் தலைவர் கோலி 9 ரன்னில் அவுட் ஆனார்.

அதை தொடர்ந்து டி வில்லியர்ஸ், அக்‌ஷதீ நாத் உள்ளிட்டோர் 25 மற்றும் 24 ரன்களில் ஆட்டம் இழந்தனர். பார்த்திவ் படேல் 63 ரன்களில் அவு டானர். அதை தொடர்ந்து ஸ்டாய்னிஸ், மொயின் அலி. நேகி ஆகியோரும் ஆட்டம் இழந்தனர். பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து இருந்தது.

அடுத்து பேட்டிங்கில் இறங்கிய சென்னை அணிக்கு 162 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த அணியின் தொடக்க வீரர் வாட்சன் 5 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். அடுத்து ரெய்னா டக் அவுட் ஆனார். அதன் பிறாகு பிணிகிஸ் 5 ரன்களிலும், ஜதால் 9 ரன்களுடனும் ஆட்டம் இழந்தனர். பின்னர் ராயுடு 29 ரன்கள், ஜடேஜா 11 ரன்கள், பிராவோ 5 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள்.

கடைசி ஓவரில் சென்னை அணிக்கு வெற்றி பெற 26 ரன்கள் தேவைப்பட்டன. சென்னை அணியின் தலைவர் தோனி முதல் ஐந்து பந்துகளில் மூன்று சிக்சர், ஒரு பவுண்டரி என 24 ரன்கள் எடுத்தார். வெற்றிக்கு இரு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி பந்தை தோனி தவற விட்டார். ஆயினும் அவர் ரன் எடுக்க முயன்று ரன் அவுட் ஆனார்.

இந்த போட்டியில் ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணி பெங்களூர் அணியிடம்தோற்றதாக அறிவிக்கபட்டுள்ளது. இந்த போட்டியில் தோனி 48 பந்துகளில் 84 ரன்கள் எடுத்துள்ளார். போட்டியில் பெங்களூரு அணியின் பார்த்திவ் படேல் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.