ஐபிஎல் 2024 தொடரில் விளையாடும் வீரர்களை தேர்ந்தெடுக்கும் ஏலம் இன்று நடைபெற்று வருகிறது.

2023 உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் ரூ. 20.5 கோடிக்கு வாங்கியுள்ளது சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி.

தங்கள் அணியில் இருந்து விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை ஏற்கனவே அறிவித்திருந்த அணிகள் இன்று தங்கள் அணிக்கு புதிய வீரர்களை தேர்ந்தெடுக்க போட்டி போட்டு வருகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏற்கனவே தோனி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, தீபக் சாஹர், டெவோன் கான்வே, மொயீன் அலி, ஷிவம் துபே, மகேஷ் தீக்ஷனா, மிட்செல் சான்ட்னர், மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், முகேஷ் சௌத்ரி, சிமர்ஜித் சிங், ஷேக் ரஷீத்,நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, அஜய் மண்டல் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

புதிதாக நியூஸிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்திராவை 1.8 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளனர் சிஎஸ்கே உரிமையாளர்கள்.

தவிர, ஷரதுல் தாக்கூர் ரூபாய் 4 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளனர்.

மேலும் 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ள நிலையில் அதில் 2 பேர் வெளிநாட்டு வீரர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.