கொச்சி: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கான ஏலம் இன்று பிற்பகல் கொச்சியில் உள்ள ஹயாத் ஓட்டலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய ஏலத்தில் மொத்தமுள்ள 405 வீரர்கள் 13 கட்டங்களாக பிரிக்கப்பட்டு ஏலத்தில் விடப்பட உள்ளனர். அதன்படி முதல்கட்டமாக 86 வீரர்கள் ஏலத்தில் இடம்பெறுகிறார்கள்.

இன்று நடைபெற்ற ஏலத்தில்,  இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ. 16.25 கோடிக்கு  சிஎஸ்கே அணி ஏலம் எடுத்தது. ஆல்ரவுண்டர் பிராவோ ஓய்வு பெற்ற நிலையில், பென்ஸ்டோக்ஸை சிஎஸ்அணி ஏலம் எடுத்து. அதுபோல அதிகபட்ச ஏலத்தொகைக்கு சாம்கரன் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். அவரை எடுக்க சிஎஸ்கே, பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், அதிகபட்ச ஏலத்தொகைக்கு பஞ்சாப் அணி சாம் கரனை ஏலம் எடுத்தது.

இன்று ஏலம் நடைபெறுவதைத்   தொடர்ந்து, முற்பகல் முதலே  அனைத்து அணி நிர்வாகத்தினரும் ஐபிஎல் ஏலம் நடைபெறும் இடத்துக்கு வருகை தந்தனர். ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் சன் ரைசர்ஸ் அணி அதிகபட்சமாக 13 வீரர்கள் வரை எடுக்கலாம். அந்த அணியிடம் ரூ. 42.25 கோடி பணம் மீதம் உள்ளது. இந்த ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் காணொலி காட்சி மூலம் ஐபிஎல் 2023 சீசன் மினி ஏலத்தில்  பங்கேற்றார்.

ஐபிஎல் 2023 சீசனின் முதல் வீரராக கேன் வில்லியம்சன் அடிப்படை விலையான ரூ. 2 கோடி விலைக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

இரண்டாவது வீரராக இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஹாரி ப்ரூக்கை கடுமையான போட்டிக்கு இடையே ரூ. 13.25 கோடிக்கு சன் ரைசர்ஸ் அணி ஏலத்தில் வாங்கியுள்ளது.  ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அவரை வாங்க கடுமையாக போட்டியிட்டன

பஞ்சாப் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட மயங்க் அகர்வாலை ரூ. 8.25 கோடிக்கு சன் ரைசர்ஸ் வாங்கியுள்ளது.   பமடலடநழஇ

இங்கிலாந்து வீரர் ஹார் ப்ரூக் ரூ. 13.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. இரு வீரர்களுக்கு மட்டும் ரூ. 21.50 கோடி செலவழித்துள்ளது. தற்போது சன் ரைசர்ஸ் வசம் ரூ. 20.75 கோடி மீதமுள்ளது

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆல்ரவுண்டரான சாம் கரன் ரூ. 18.50 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் வாங்கியுள்ளது. இவரை வாங்குவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் கடுமையாக போட்டியிட்டன

வெஸ்ட்இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஓடியன் ஸ்மித் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சிகந்தர் ராசாவை பஞ்சாப் கிங்ஸ் அணியும் அடிப்படை விலையான ரூ. 50 லட்சத்துக்கு வாங்கியுள்ளனர்

வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 5.75 கோடிக்கு வாங்கியுள்ளது. இவரை வாங்குவதற்கு ராஜஸ்தான் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் போட்டி போட்ட நிலையில் கடைசியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது.

ஆஸ்திரேலியா வீரர் கேமரூன் க்ரீனை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 17.50 கோடிக்கு வாங்கியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ. 16.25 கோடிக்கு வாங்கியுள்ளது பிராவோவுக்கு மாற்றாக சிறந்த ஆல்ரவுண்டர் தேவைப்பட்ட நிலையில், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது.