கொச்சி: கொச்சியில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தம் 7 வீரர்களை ஏலம் எடுத்துள்ளது. இதில் முக்கியமான தேர்வாக இங்கிலாந்து அணி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் உள்ளார். இதைத்தொடர்ந்து 2023ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் பங்கேற்க உள்ள 23 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை சிஎஸ்கே வெளியிட்டு உள்ளது.
ஐபிஎல் 2023வது சீசனுக்கான மினி ஏலம் முதன்முறையாக, கேரளாவின் கொச்சி அருகே உள்ள தீவு ஒன்றில் உள்ள பிரமாண்டமான கிராண்ட் ஹயாத் ஹோட்டலில் நேற்று தொடங்கி நடைபெட்று வருகிறது. நேற்றைய ஏலத்தில், மொத்தம் ரூ.167 கோடி செலவு செய்து, 29 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 80 வீரர்களை ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேரை சிஎஸ்கே எடுத்துள்ளது.
அதன்படி, அஜிங்கியா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, கெய்ல் ஜேமிசன், அஜய் மண்டல், பகத் வர்மா ஆகியோர் ஏலத்தில் எடுக்கப்பட்டு உள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸை ரூ. 16.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. இவர் ஏலம் எடுக்க மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட அணிகள் போட்டிபோட்டன. பிராவோக்கு மாற்றாக ஆல்ரவுண்டராக இவர் எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அதுபோல ரஹானேவை அடிப்படை தொகையா ரூ.50 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. கடந்த தொடரில் இவர் கடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார்.
இளம் வீரர்களான ஷேக் ரஷீத் ரூ. 20 லட்சம், நிஷாந்த் சிந்து ரூ. 60 லட்சம் என ஏலம் எடுத்துள்ளனர். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளரான கெய்ல் ஜேமிசன் ரூ. 1 கோடி கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். அதேபோல் ஆல்ரவுண்டர்களான அஜன் மண்டால், பகத் வர்மா ஆகியோர் அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்துக்கு எடுக்கப்பட்டுள்ளனர்.
- சென்னை சூப்பர் கிங்ஸ்:
- பென் ஸ்டோக்ஸ்-ரூ.16¼ கோடி
- கைல் ஜாமிசன்- ரூ.1 கோடி
- நிஷாந்த் சிந்து- ரூ.60 லட்சம்
- ரஹானே- ரூ.50 லட்சம்
- பகத் வர்மா- ரூ.20 லட்சம்
- அஜய் மண்டல்-ரூ.20 லட்சம்
- ஷேக் ரஷீத்- ரூ.20 லட்சம்
- ஐதராபாத் சன் ரைசர்ஸ்:
- ஹாரி புரூக்- ரூ.13¼ கோடி
- மயங்க் அகர்வால்- ரூ.8¼ கோடி
- ஹென்ரிச் கிளாசென்- ரூ.5¼ கோடி
- விவ்ராந்த் ஷர்மா- ரூ.2.6 கோடி அ
- டில் ரஷித்- ரூ.2 கோடி
- மயங்க் தாகர்- ரூ.1.8 கோடி
- அகில் ஹூசைன்- ரூ.1 கோடி
- மயங்க் மார்கண்டே- ரூ.50 லட்சம்
- உபேந்திர சிங் யாதவ்- ரூ.25 லட்சம்
- சன்விர்சிங்- ரூ.20 லட்சம்
- அன்மோல்பிரீத் சிங்- ரூ.20 லட்சம் ச
- மர்த் வியாஸ்- ரூ.20 லட்சம்
- நிதிஷ்குமார் ரெட்டி- ரூ.20 லட்சம்
- டெல்லி கேபிட்டல்ஸ்:
- முகேஷ்குமார்- ரூ.5½ கோடி
- ரோசவ்- ரூ.4.6 கோடி
- மனிஷ் பாண்டே- ரூ.2.4 கோடி
- பில் சால்ட்- ரூ.2 கோடி
- இஷாந்த் ஷர்மா- ரூ.50 லட்சம்
- குஜராத் டைட்டன்ஸ்:
- ஷிவம் மாவி-ரூ.6 கோடி
- ஜோஷூவா லிட்டில்-ரூ.4.4 கோடி
- வில்லியம்சன்- ரூ.2 கோடி
- கே.எஸ்.பரத்- ரூ.1.2 கோடி
- மொகித் ஷர்மா- ரூ.50 லட்சம்
- ஒடியன் சுமித்- ரூ.50 லட்சம்
- உர்வில் பட்டேல்- ரூ.20 லட்சம்
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
- ஷகிப் அல்-ஹசன்- ரூ.1½ கோடி
- டேவிட் வைஸ்- ரூ.1 கோடி
- என்.ஜெகதீசன்- ரூ.90 லட்சம்
- வைபப் அரோரா- ரூ.60 லட்சம்
- மன்தீப்சிங்- ரூ.50 லட்சம்
- லிட்டான் தாஸ்- ரூ.50 லட்சம்
- குல்வந்த் கெஜ்ரோலியா- ரூ.20 லட்சம்
- சுயாஷ் ஷர்மா- ரூ.20 லட்சம்
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்:-
- நிகோலஸ் பூரன்- ரூ.16 கோடி
- டேனியல் சாம்ப்ஸ்- ரூ.75 லட்சம்
- அமித் மிஸ்ரா- ரூ.50 லட்சம்
- ரொமாரியா ஷெப்பார்டு- ரூ.50 லட்சம்
- நவீன் உல்-ஹக்- ரூ.50 லட்சம்
- ஜெய்தேவ் உனட்கட்- ரூ.50 லட்சம்
- யாஷ் தாக்குர்- ரூ.45 லட்சம்
- ஸவப்னில் சிங்- ரூ.20 லட்சம்
- யுத்விர் சாரக்- ரூ.20 லட்சம்
- பிரேராக் மன்கட்- ரூ.20 லட்சம்
- மும்பை இந்தியன்ஸ்:
- கேமரூன் கிரீன்-ரூ.17½ கோடி
- ஜய ரிச்சர்ட்சன்- ரூ.1½ கோடி
- பியுஷ் சாவ்லா- ரூ.50 லட்சம்
- நேஹல் வாதேரா- ரூ.20 லட்சம்
- ராகவ் கோயல்- ரூ.20 லட்சம்
- விஷ்ணு வினோத்- ரூ.20 லட்சம்
- ஜேன்சன்- ரூ.20 லட்சம்
- ஷம்ஸ் முலானி- ரூ.20 லட்சம்
- பஞ்சாப் கிங்ஸ்:
- சாம் கர்ரன்- ரூ.18½ கோடி
- சிகந்தர் ராசா- ரூ.50 லட்சம்
- ஹர்பிரீத் பாட்டியா- ரூ.40 லட்சம்
- ஷிவம் சிங்- ரூ.20 லட்சம்
- வித்வத் காவேரப்பா- ரூ.20 லட்சம்
- மொகித் ராதீ- ரூ.20 லட்சம்
- ராஜஸ்தான் ராய்லஸ்:
- ஜாசன் ஹோல்டர்- ரூ.5¾ கோடி
- ஆடம் ஜம்பா- ரூ.1½ கோடி
- ஜோ ரூட்- ரூ.1 கோடி
- டோனோவன் பெரைரா- ரூ.50 லட்சம்
- கே.எம்.ஆசிப்- ரூ.30 லட்சம்
- பி.ஏ.அப்துல்- ரூ.20 லட்சம்
- ஆகாஷ் வஷிசிட்- ரூ.20 லட்சம்
- குணால் ரத்தோர்- ரூ.20 லட்சம்
- முருகன் அஸ்வின்- ரூ.20 லட்சம்
- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்:
- வில் ஜாக்ஸ்- ரூ.3.2 கோடி ரீஸ் டாப்லே- ரூ.1.9 கோடி
- ராஜன் குமார்- ரூ.70 லட்சம்
- அவினாஷ் சிங்- ரூ.60 லட்சம்
- சோனு யாதவ்- ரூ.20 லட்சம்
- ஹிமான்ஷூ ஷர்மா- ரூ.20 லட்சம்
- மனோஜ் பண்டாகே- ரூ.20 லட்சம்