மும்பை:
பிஎல் 2022 தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 20 ஓவரில் 146 ரன் மட்டுமே எடுத்தது.

147 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய டெல்லி அணி 19 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் பஞ்சாப்- லக்னோ அணிகள் மோத உள்ளன.