மும்பை: ஐபிஎல் போட்டி நேற்று இரவு சிஎஸ்கே அணிக்கும், மும்பை அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே சிஸ்கே அணி பிளேஆஃப் சுற்றுக்குள் செல்ல தகுதி பெறும் எனற நிலையில், முப்பை அணியுடன் நடைபெற்ற போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் சென்னை அணி வெளியேறி உள்ளது. இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
15-வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 26ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறத. இந்த ஆண்டு 10 அணிகள் இடம்பெற்று உள்ளதால் போட்டிகளும் அதிகரிக்கப்பட்டு உள்ளன. இதுவரை 58 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.
நேற்று இரவு (12ந்தேதி) 59-வது லீக் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .
இதனால் சிஎஸ்கே அணி மட்டையுடன் மைதானத்துக்குள் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவான் கான்வே, ரிதுராஜ் கெய்க்வாட் களம் இறங்கினர். இறங்கிய வேகத்திலேயே டேவான் கான்வே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய மொயீன் அலியும் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அடுத்து வருபவர்களாக நன்றாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், அடுத்தடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா 1 ரன்னுக்கும், ருதுராஜ் கெய்க்வாட் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சென்னை வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் சோகமடைந்தனர். சிஎஸ்கே அணி இந்த ஆண்டு பிளேஆஃப் சுற்றுக்குள் போவது கடிதம் என்பது தெரிய வந்தது. இருந்தாலும் கேப்டன் டோனி மட்டும் நிலைத்து நின்று முப்பை அணிக்கு டஃப் கொடுத்து ஆடினார். இறுதியில் சென்னை அணி 16 ஓவர்களில் 97 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டோனி 36 ரன்கள் எடுத்தார். மும்பை அணியில் டேனியல் சாம்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 98 ரன்கள் இலக்குடன் மும்பை அணி களத்திற்குள் புகுந்தது. மும்பை அணியின் தொடக்க வீரர் இசான் கிஷன் 6 ரன்னுக்கும், கேப்டன் ரோகித் சர்மா 18 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால் சிஎஸ்கே அணிக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்ப ட்டது. ஆனால், டேனியல் சாம்ஸ் ஒரு ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். திலக் வர்மா 34 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். ஹிருத்திக் ஷோக்கீன் 18 ரன் அடித்தார். டிம் டேவிட் 16 ரன் எடுத்து களத்தில் இருந்தார்.
மும்பை அணி 14.5 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் அடித்தது. இதையடுத்து அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியின் முகேஷ் சவுத்ரி அதிகபட்சமாக 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
இன்றைய போட்டியில் தோல்வி அடைந்ததால், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் சென்னை அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.