வார ராசிபலன்: 13.5.2022  முதல் 19.5.2022வரை! வேதா கோபாலன்

Must read

மேஷம்  

விடாமுயற்சிகளால் சக்ஸஸ் கெடைக்கும் வாரம். தேவையான உதவிகள் அனைத்தும் கெடைக்கும். குடும்ப உறவுகள் பலப்படும். தாய் தந்தையரின் உதவி கெடைக்கும். உங்க பிரதர்ஸ் அல்லது சிஸ்டர்ஸ் உங்களுக்கு பல வகையிலும் உதவி செய்வார். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கெடைக்கும், வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சியும் சாதகமாக இருக்கும். இதுவரை தாமதப்பட்டு வந்த பதவி உயர்வு பற்றிய நியூஸ் உறுதியாகும். சொந்தத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தொழிலில் லாபம் அபரிமிதமாக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கெடைக்கும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். வியாபார இடங்களை விரிவுபடுத்துவது போன்றவை நடக்கும். அதற்குத் தேவையான பொருளாதார உதவிகள் கெடைக்கும். இயல்பாக பிராபர்ட்டி சேர்க்கை ஏற்படும். கவலைகள் கஷ்டங்கள் படிப்படியாக் குறையும். எதுக்குங்க கவலைப்பட்டுக்கிட்டு?

சந்திராஷ்டமம்:  மே மாதம் 16ம் தேதி முதல் மே மாதம் 18 ம் தேதி வரை. சந்திராஷ்டம தினங்களில்  பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்

ரிஷபம்

தாமதப்பட்டு வந்த திருமண முயற்சிகள் திருப்தி தரும் வகையில் இருக்கும். மாணவர்கள் கல்வியில் ஆர்வம் அதிகமாகும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் நெருங்கிய ஃப்ரெண்ட்ஸ் மூலமாகக் கெடைக்கும். அலுவலகப் பணியில் இருந்து கொண்டிருந்த கூடுதல் சுமை குறைந்து மனம் லேசாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இயல்பான நிலையே இருக்கும். எதிர்பார்த்த வருமானம் இருக்கும். ஆனாலும் எந்த ஒரு விஷயத்திலும் டென்ஷன் வராது. டோன்ட் ஒர்ரி. வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். பிராபர்ட்டி வாங்குவது விற்பது போன்ற விஷயங்கள் முன்னேற்றம் தருவதாக இருக்கும். உறவுகளால் ஹெல்ப் கெடைக்கும்.  ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தாமதப்பட்டுக் கொண்டிருந்த பணவரவு இப்போது உடனடியாக கெடைக்கும்.  தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நல்ல வேலை

மிதுனம்

எந்த விஷயத்திலும் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள். பணச்செலவு அதிகமாக ஏற்படும். ஆரோக்கியம் அச்சுறுத்தினாலும் சுலபமாக  அதிலிருந்து மீண்டு நிம்மதியும் சந்தோஷமும் அடைவீங்க. பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். சகோதர வகையில் இருந்த வருத்தங்கள் தீர்வதற்கான வழி வகைகள் கெடைக்கும். தொழிலுக்குத் தேவை யான உதவிகள் நெருங்கிய உறவினர்கள் அல்லது குடும்பத்தினர் மூலம் கெடைக்கும். பயணத்தால் பெனிஃபிட் கெடைக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீங்க. புதிய வியாபாரம் தொடங்குவது பற்றிய சிந்தனை ஏற்படும். அது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீங்க. ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு நிம்மதி தரும். உற்பத்தியான பொருட்கள் உடனுக்குடன் விற்பனையாகும்.

கடகம்

நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவிகள் கெடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கெடைக்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கெடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் சக்ஸஸ் தரும். சுபகாரிய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கெடைக்கும்.  வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு குடும்ப உறவுகளால் ஹெல்ப் மற்றும் சப்போர்ட் கெடைக்கும் அதிக அளவிலான நன்மைகள் ஏற்படும் வாரம். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கெடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். வீட்டுக் கடன் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான உதவிகள் பெருமளவு கெடைக்கும்.

சிம்மம்

எத்துறையில் நீங்கள் இருந்தாலும் அதில் சீரான வளர்ச்சியும் லாபமும் கெடைக்கும். தேவையான உதவிகளும் கெடைக்கும். பெண்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பாங்க. வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். பிராபர்ட்டி வாங்குவது விற்பது போன்றவை முன்னேற்றம் தரக்கூடியதாக இருக்கும். புதிய கடன் வாங்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் தொடர்பாக எதிர்பார்த்த முதலீடுகள் கெடைக்கும். அலுவலகத்தில் அடுத்தவர்கள் பணியைச் செய்ய வேண்டியது வரும். தாமதமாகும். அநாவசிய செலவுகள் ஏற்படாதபடி முன்னாகவே நீங்க செலவுகளை இழுத்துப் பிடிச்சுடுங்க. குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து விடுவீங்க. தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். அலுவலகப் பணிகளில் இயல்பான நிலை தொடரும். எந்த விஷயத்திலும் பொறுமையாக இருப்பது நல்லது. அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.

கன்னி

எதிர்பார்த்த உதவிகள் கெடைக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த பணவரவு இந்த வாரம் கைக்கு வந்து சேரும். அலுவலகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். தொல்லை தந்த கடன் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். நில வியாபாரம் தொடர்பான தகவல் மனதுக்கு ஹாப்பினஸ் தருவதாக இருக்கும். வெளிநாட்டிலிருந்து நல்ல நியூஸ் கெடைக்கும். நண்பர்களோட சப்போர்ட் கெடைக்கப் பெறுவீங்க. கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவாகும். பூர்வீகச் பிராபர்ட்டி சம்பந்தமான பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். தரகு மற்றும் கமிஷன் தொழிலில் இருப்பவர்களுக்கு மன நிறைவான வருமானம் கெடைக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கெடைக்கும். நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீங்க. தேவையான உதவிகள் தாமாகவே தேடி வரும். பொருளாதாரப் பிரச்சினைகள் தீரும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும்.

துலாம்

புதிய ஒப்பந்தங்கள் எதிலும் கையெழுத்திட வேண்டாம். வியாபார விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும். வாடிக்கையாளர்களிடம் பொறுமையைக் கையாள வேண்டும். கையாளும் பொருட்களில் கவனமாக இருக்க வேண்டும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். திருமணமான தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். இப்போது பணிபுரியும் இடத்திலிருந்து வேறு நிறுவனத்திற்கு மாறும் வாய்ப்புகள் உண்டு. தொழிலில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் வாய்ப்புகள் கெடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்பெறுவார்கள். பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பாங்க, குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். இதுவரை புத்திர பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும்.

விருச்சிகம்

பூர்வீகச் பிராபர்ட்டி சம்பந்தமான விஷயங்கள் சகோதரர்களிடம் பேசி நல்ல முடிவுகளை எடுப்பீங்க. ஒரு சிலர் தாங்கள் பணிபுரியும் வேலையை விட்டுவிட்டு புதிதாக தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பாங்க. கலைஞர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள் கெடைக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே கெடைக்கும். வருமானம் இருமடங்காக இருக்கும். பணியில் கூடுதல் பொறுப்புகள் கெடைக்கும். வரவேண்டிய நிலுவைத் தொகை வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான வளர்ச்சி முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சுப விசேஷங்கள் பற்றிய பேச்சுவார்த்தைகள் நடக்கும். குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். ஒரு சில எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். அலுவலகப் பணிகளில் மனநிறைவு ஏற்படும்.

தனுசு

ஓரளவுக்கு நன்மைகள் ஏற்படும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் உங்க முயற்சியின்பேரில் வெற்றிகரமாக முடியும். வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். முக்கிய நபர்களின் சந்திப்பு நம்பிக்கை தருவதாக இருக்கும்.  புதிய நபர்களிடம் கவனமாகப் பழகுங்கள். பேச்சில் அதிக கவனம் தேவை. அவசியமின்றி யாருடனும் பேச வேண்டாம். குடும்பத்தில் ஒரு சில பிரச்சினைகள் தோன்றி மறையும். கணவன் அல்லது மனைவியின் உடல்நலத்தில் பாதிப்புகள் ஏற்படும். தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும்.ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். சக ஊழியர்களோடு இணைந்து பணியாற்றும் நிலையும் ஏற்படும். புதிய வியாபார வாய்ப்புகள் தேடி வரும். மிகப் பெரிய பிராஃபிட் தரக்கூடிய தொழில் வாய்ப்புகளும், வியாபார வாய்ப்புகளும் கிடைக்கும்.

மகரம்

அரசு உதவிகளும் வங்கியின் கடன் உதவியும் கெடைக்கும். வியாபார வளர்ச்சி சீராகவும், சிறப்பாகவும் இருக்கும். தரகு மற்றும் கமிஷன் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வருமானம் இரட்டிப்பாகும். பெண்களுக்கு தந்தைவழி உறவுகளால் அட்வான்டேஜ் ஏற்படும். இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் உறுதி செய்யப்படும். மாணவர்களுக்கு மிகுந்த உழைப்பு மற்றும் முயற்சியின்காரணமாகக் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்க பேச்சினால் நன்மை உண்டாகும். செயல்பாட்டில் உறுதி அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிலும் நிதானமான பலன்களே இருக்கும். நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல நியூஸ் இன்னிக்குக் கெடைக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கெடைக்கும். தற்போது இருக்கும் வியாபாரத்தை விரிவு படுத்துவதற்கான முயற்சியில் இறங்குவீங்க. தொழிலுக்குத் தேவையான உதவிகள் கெடைக்கும்.

கும்பம்

எடுத்துக்கொண்ட முயற்சிகள் சக்ஸஸ் தரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். குழந்தைகள் வெளிநாட்டுப் பணி பற்றிய நியூஸ் உறுதியாகி மகிழ்ச்சியைத் தரும். பூர்வீக பிராபர்ட்டி தொடர்பான விஷயங்கள் நல்ல முடிவு கெடைக்கும். வேலை தொடர்பான விஷயங்களில் இருந்த நெருக்கடிகளும் வேலைப் பளுவும் விலகும். புதிய தொழில் தொடங்குவது பற்றி ஆலோசனை செய்வீங்க. இல்லத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீங்க. திருமணம் தொடர்பான தகவல் உறுதியாகி சந்தோஷமளிக்கும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கெடைக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பாக பயணங்கள் ஏற்படும். முக்கிய நபர்களின் சந்திப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உங்க மீது மற்றவர்களுக்கு உள்ள மதிப்பு அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம்:  மே மாதம் 11ம் தேதி முதல் மே மாதம் 14ம் தேதி வரை. சந்திராஷ்டம தினங்களில்  பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

மீனம்

நிதானமாக செயல்பட வேண்டும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை தள்ளிவைக்க வேண்டும். பயணங்களை தவிர்க்க வேண்டும். குடும்பத்தினர்களிடம் கோபத்தைக் காட்டாமல் இருக்க வேண்டும். பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கெடைக்கும். முக்கியமான ஒப்பந்தங்கள் எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருந்ததவங்களுக்கு இன்னிக்கு நல்ல நியூஸ் கெடைக்கும். குடும்பத்தில் சுப விசேஷங்கள் பற்றிய விஷயங்கள் முடிவுக்கு வரும். நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த முக்கியமான நியூஸ் ஒன்று இந்த வாரம் கெடைக்கும். மன மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். பிராபர்ட்டி வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு உண்டு. புதிய நிறுவனங்களோடு இணைந்து செயலாற்றவும் வாய்ப்புகள் கெடைக்கும். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

சந்திராஷ்டமம்:  மே மாதம் 14ம் தேதி முதல் மே மாதம் 16 ம் தேதி வரை. சந்திராஷ்டம தினங்களில்  பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்

More articles

Latest article