மும்பை:
பிஎல் தொடரில் பெங்களுரூ – ஹைதராபாத் அணிகள் இடையே நடந்த போட்டியில் பெங்களுரூ அணி 67 ரன்கள் வித்தியாசத்திலும், சென்னை – டெல்லி அணிகள் இடையே நடந்த போட்டியில் சென்னை அணி 91 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

பெங்களுரூ – ஹைதராபாத் அணிகள் இடையே நடந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களுரூ அணி முதலில் பேட் செய்து 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன் எடுத்தது. 193 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஹைதராபாத் அணி, 19.2 ஓவரில் 125 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதனால், பெங்களுரூ அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை – டெல்லி அணிகள் இடையே நடந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய சென்னை 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன் எடுத்தது. 209 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய டெல்லி அணி, 17.4 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 117 ரன் எடுத்து 91 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் மும்பை – கொல்கத்தா அணிகள் மோத உள்ளன.

[youtube-feed feed=1]