14வது ஐபிஎல் சென்னையில் தொடக்கம்

Must read

சென்னை:
ப்ரல் 9ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன. முதல் போட்டி சென்னையில் நடைபெறுகிறது.

விவோ இந்தியன் பிரீமியர் லீக் 2021 இன் அட்டவணையை இந்தியாவில் நடத்த ஐபிஎல் நிர்வாக குழு நேற்று அறிவித்தது.

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஐ.பி.எல் போட்டிகள் அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் நடக்க உள்ளது.

இந்த சீசன் 2021 ஏப்ரல் 9 ஆம் தேதி சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

அனைத்து அணிகளும் லீக் கட்டத்தில் 6 இடங்களில் 4 இடங்களில் விளையாடும்.  பிற்பகல் போட்டிகள் மதியம் 3:30 மணிக்கும் மாலை போட்டிகள் இரவு 7:30 மணிக்கும் தொடங்க உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article