ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் நாளை தொடக்கம்

Must read

துபாய்:
பிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் நாளை துபாயில் தொடக்க உள்ளது.
13வது ஐபிஎல் டி.20 கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி தொடங்கிய கொரோனா தொற்று காரணமாக போட்டித்தொடர் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. மொத்தம் 29 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை முதல் நடைபெற உள்ளது.
இரண்டாவது பாதி தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இன்டியன்ஸ் அணிகள் மோதி விளையாட உள்ளன.
நடப்பு 2021 சீசனின் முற்பாதியில் சென்னை அணி ஏழு ஆட்டங்களில் விளையாடி ஐந்து வெற்றிகளைப் பெற்றுள்ளது. அதன் மூலம் பத்து புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தை சென்னை பிடித்துள்ளது.
மும்பை அணி நடப்பு சீசனில் ஏழு ஆட்டங்களில் நான்கு வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. மூன்று போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 31 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் 12ல் சென்னை, 19ல் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றுள்ளன. கடைசியாக மோதிய 5 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 4 போட்டிகளில் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article