அபுதாபி: ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் மும்பை – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
இரவு 7.30 மணிக்கு அபுதாபி மைதானத்தில் இப்போட்டி தொடங்குகிறது. தற்போதைய நிலையில் மும்பை அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாமிடத்திலும், கொல்கத்தா அணி நான்காமிடத்திலும் உள்ளது.
இந்த இரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே நடைபெற்ற போட்டியில், மும்பை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இன்றைய போட்டியில் கொல்கத்தா பழிதீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கொல்கத்தா அணியில் கேப்டன் பொறுப்பை வகித்த தினேஷ் கார்த்திக், அப்பதவியிலிருந்து விலகி, இயான் மோர்கனிடம் அப்பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில், வேறு பல அணிகள் மோசமாக செயல்பட்டு வரும் நிலையில், கொல்கத்தாவின் தினேஷ் கார்த்திக் மீது மட்டும் விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.