ஐபிஎல்2020:  டாஸ் வென்ற சென்னை அணி  பந்துவீசுகிறது…

Must read

துபாய்:  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறுகிறது.
இன்று முதல் ஆட்டம் தொடங்கி உள்ள நிலையில், டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதன் காரணமாக, மும்பை இந்தியன் மட்டையுடன் களமிறங்கி உள்ளது.
ரோகித் சர்மா, வின்டென் டிக்காக் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி உள்ளனர்.  சிஎஸ்கே வீரர்  சாஹர் பந்துவீச்சை தொடங்கி உள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விரர்கள் விவரம்:  முரளி விஜய், ஷேன் வாட்சன், ஃபஃப் டு பிளெசிஸ், அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, சாம் குர்ரான், தீபக் சஹார், பியூஷ் சாவ்லா, லுங்கி என்ஜிடி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மும்பை அணி வீரர்கள்: ரோஹித் சர்மா, குயின்டன் டி கோக், சூர்யகுமார் யாதவ், திவாரி, கிருனல் பாண்ட்யா, ஹார்டிக் பாண்ட்யா, கீரோன் பொல்லார்ட், ஜேம்ஸ் பாட்டின்சன், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

More articles

Latest article