மும்பை

மும்பையில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது.

நேற்று மும்பையில் ஐபிஎல் போட்டிகளின் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.   இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.    தற்போதைய நிலையில் கொல்கத்தா அணிக்கு பிளே ஆன் சுற்றுக்குள் செல்ல இந்த போட்டியின் வெற்றி மிகவும் அவசியமாக இருந்தது.

கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்கார்களாக கிறிஸ் லைன், கில் ஆகியோர் இறங்கினர்.   இந்த ஜோடி 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டியின் ஆறாம் ஓவரில் ஹர்திக் பந்து வீசினார்.  அவர் தனது முதல் பந்தில் 9 ரன்கள் எடுத்திருந்த கில்லை அவுட் ஆக்கினார்.   அடுத்த ஓவரில் அவர் கிறிஸ்ட் லைனை வெளியேற்றினார்.  அப்போது கில் 41 ரன்கள் எடுத்திருந்தார்.

மலிங்காவின் பந்து வீச்சில் அணியின் தலைவர் தினேஷ் கார்த்திக் 3 ரன்களுடனும், ரஸ்ஸல் ரன் எடுக்காமலும் அவுட் ஆனார்கள்.  உத்தப்பா மற்றும் ராணா ஜோடி ஓரளவு தாக்கு பிடித்த போதிலும் ராணா 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.   கொல்கத்தா அணி 20 ஓவரில் 7 விக்கட்டுகளை இழந்து 133 ரன்கள் ரன்கள் எடுத்திருந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி 134 ரன்கள் வெற்றி இலக்குடன் பேட்டிங்கை தொடங்கியது.  தொடக்க ஆட்டக்காரர்களான டிகோக் மற்றும் ரோகித் சர்மா கூட்டணியில் டிகோ 23 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் இழந்தார்.    அடுத்து களம் இறங்கிய சூரியகுமார் யாதவுடன் இணைந்த ரோகித் சர்மா ஆகியோர் 16.1 ஓவரில் 134 ரன்கள் எடுத்தனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கட் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.    ஆட்ட  இறுதியில் ரோகித் சர்மா 55 ரன்களுடனும் யாதவ் 46 ரன்களும் ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்ப்பிடத்தக்கது.