ஐபிஎல்2019: சொந்த மண்ணில் ராஜஸ்தானை பந்தாடிய கொல்கத்தா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Must read

ஜெய்ப்பூர்:

பிஎல் தொடரின் 21வது லீக் போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும்,  கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கும் இடையே  நேற்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூரில் போட்டி  நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சு தேர்வு செய்தார்.

இதையடுத்து ராஜஸ்தான்  அணி களமிறங்கியது. 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்து கொல்கத்தாவுக்கு 140 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அதிரடியாக ஆடி ராஜஸ்தானை சொந்த மண்ணிலேயே  விரட்டியடித்தது,

கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சுனில் நரைன், கிறிஸ்லின் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே தங்களது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தனர் நரைன் 25 பந்துகளில்  6 பவுண்டரி, 3 சிக்சர் உடன் 47 ரன்கள் எடுத்திருந்தார்.  கிறிஸ்லின் 32 பந்தில் , 6 பவுண்டரி, 3 சிக்ச ருடன் 50 ரன் கள் எடுத்து அசத்தினர். ராபின் உத்தப்பா 26 ரன்களுடனும், சுப்மான் கில் 6 ரன்னுட னும் அவுட் ஆகாமல் இருந்தனர்.  கொல்கத்தா அணி 13.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதுவரை 5 போட்டிகளில் ஆடிய கொல்கத்தா அணி 4வது வெற்றியை ருசித்த நிலையில்,  8 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. ராஜஸ்தானுக்கு இது 4-வது தோல்வியாகும்.

பரபரப்பான  ஆட்டத்தில் கொல்கத்தா தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் லின்ஆடிக்கொண்டிருந்த போது தவால் குல்கர்னி வீசிய பந்து லெக் ஸ்டம்பை தாக்கி, லைட் எரிந்தது.  ஆனால் ஸ்டம்பு மீது இருந்து பெய்ல்ஸ் அசையவில்லை. அது கீழே விழாததால் அவுட்டில் இருந்து தப்பித்த கிறிஸ்லின் தொடர்ந்து அதிரடியாக ஆடி 50 ரன்கள் எடுத்து அரை சதத்தை நிறைவு செய்தார்.

More articles

Latest article