ஐதராபாத்:

தராபாத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் சார்பில் அறிமுக மான ஆன்டிகுவா வீரர் அஸாரி ஜோசப் என்ற 22 வயது இளைஞர், அபாரமாக பந்து வீசி, ஐதராபாத் அணியை மிரள வைத்தார்.

ஆட்டத்தின்போது பந்து வீசிய அஸாரி  3.4 ஓவர்களில் 12 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐபிஎல் வரலாற்றிலேயே புதிய பவுலிங் வரலாற்று சாதனையை படைத்தார்  அறிமுக வீரர் அஸாரி ஜோசப்.  வீழ்த்தி. அறிமுக ஐபிஎல் ஆட்டத்திலேயே 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சிறப்பையும் பெற்றார்.

ஏற்கனவே  கடந்த 2008 ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் பாகிஸ்தானை சேர்ந்த வீரர்  சோஹைல் தன்வீர் 6-14 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. தற்போது, அஸாரி ஜோசப் அவரது சாதனையை வீழ்த்தி உள்ளார்.

மும்பை இந்தியன்சின் மே.இ.தீவுகள் வேகப்புயல் அல்ஸாரி ஜோசப், சன் ரைசர்ஸ் அணியை மிக குறைந்த ரன்னான  96 ரன்களுக்குச் சுருள வைத்தது. இதற்கு முன்பாக 2015-ல் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 113  ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதே குறைவான ரன் எண்ணிக்கையாக இருந்தது.

ஏற்கனவே  அறிமுக ஐபிஎல் போட்டியின் முதல் பந்திலேயே டேவிட் வார்னரை இன்சைடு எட்ஜில் பவுல்டு செய்தார் ஜோசப், இதுவும் ஒரு ஐபிஎல் சாதனையாகும். மேலும் தன் அறிமுக ஓவரிலேயே விக்கெட் மெய்டன் சாதனையிலும் பாட் கமின்ஸுடன் இணைந்தார் ஜோசப்.

மலிங்கா இல்லாததால் இந்த வாய்ப்பைப் பெற்ற ஜோசப் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியான நேரத்தில் சரியான முறையில் பயன்படுத்தி முதல் போட்டியிலேயே வெற்றி வாகையை சூடி வரலாற்று சாதனை படைத்தார்.

ஆட்டத்தின்போது,   தன் முதல் பந்தில் டேவிட் வார்னரை இன்சைடு எட்ஜில் பவுல்டு செய்த ஜோசப், பிறகு விஜய் சங்கரை டாப் எட்ஜ் செய்ய வைத்து பெவிலியன் அனுப்பினார். 16வது ஓவரில் இவர் மீண்டும் வந்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது மும்பை இந்தியன்ஸ் பக்கம் போட்டியை உறுதி செய்தது. தீபக் ஹூடாவுக்கு ஒரு வேகமான நேர் பந்து இவரும் இன்சைடு எட்ஜில் பவுல்டு ஆனார்.  அடுத்த பந்தே அபாய வீரர் ரஷீத் கான் புல் ஷாட்டை கொடியேற்ற ஜோசப்பே கேட்சை எடுத்தார். பிறகு புவனேஷவர் குமாரின் ஸ்டம்புகளை பறக்க விட்ட ஜோசப், சித்தார்த் கவுல் விக்கெட்டை வீழ்த்தி 6 விக்கெட்டுகளை 12 ரன்களுக்கு கைப்பற்றி ஐதராபாத்தை விரட்டியடித்தார்.

தனது சாதனை குறித்து  ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட அஸாரி ஜோசப் கூறும்போது, இன்றைய ஆட்டம் தனக்க கனவு போல இருந்தது, எனது திட்டத்தின்படியே செயல்பட்டேன். இன்றைய ஆட்டத்தை வெல்ல வேண்டும் என நினைத்து பந்துவீசினேன் , சக வீரர்களும் சிறப்பாக ஆடினர். கடின உழைப்பால் இதை சாதிக்க முடிந்தது. பயிற்சியாளர்களும் தேவையான உத்திகளை தெரிவித்தனர் என்று கூறினார்.

அஸாரி ஜோசப்பின் சாதனையை  சச்சின், முகமது கைப், மஞ்ச்ரேக்கர், ஹர்ஷா போக்லே, கேப்டன்ரோஹித் சர்மா உள்பட ஏராளமான கிரிக்கெட் ஜாம்பவான்கள் பாராட்டினர்.