கொல்கத்தா:

 2019 ஐபிஎல் தொடரின் 6வது போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் அணியை கொல்கத்தா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முன்னதாக இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டை பிடித்த கொல்கத்தா அணி பஞ்சாப் அணிக்கு  219 ரன்கள்  இலக்கை வைத்தது.

அதைத்தொடர்ந்து பஞ்சாப் மட்டையுடன்  களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல், கிரி கெயில் களமிறங்கினர்.  ஆனால் வந்த வேகத்திலேயே 1 ரன்னில் ராகுல் வெளியேறி, சிறிது நேரத்தில்  கிறிஸ் கெயில் 20 ரன்களில் வெளியேறி பஞ்சாப் அணிக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்தனர்.

தொடர்ந்து இறங்கிய  சர்ப்ராஸ் கான் 13 ரன்கள் எடுத்த நிலையில், மாயங்க் அகர்வால் 58, டேவிட் மில்லர் 59 நிதானமாக ஆடி ரன்கனை குவித்து வந்தனர. மந்தீப் சிங் 33 ரன்கள்  எடுத்தார், இருந்தா லும் கொல்கத்தா அணியின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஒவ்வொருவராக வெளியேறினர்.

இதன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழந்து, 190 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கொல்கத்தா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொல்கத்தா பந்துவீச்சு கொல்கத்தா அணியின் பந்துவீச்சில் குல்தீப் 4 ஓவர்களில் 32 ரன்கள் கொடுத்தார். ரஸ்ஸல் 3 ஓவர்களில் 21 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தினார். பியுஷ் சாவ்லா 3 ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றினார். பிரசித் கிருஷ்ணா 4 ஓவர்களில் 42 ரன்களும், சுனில் நரைன் 2 ஓவர்களில் 1 விக்கெட் மற்றும் 26 ரன்களும் கொடுத்து இருந்தனர்.